வனிதாவை மட்டும் ஏமாற்றிய பிக் பாஸ்.! இன்றாவது அந்த ஆசை நிறைவேறுமா.!

0
2855
vaintha
- Advertisement -

தமிழில் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பல படங்களில் நடித்தும், பல படங்களை தயாரித்தும் உள்ளார். வனிதா என்று கேட்டாலே அனைவரும் திமிர் பிடித்தவள், தான் என்ற அதிகாரம் கொண்டவர் என்று பல விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதிலும் அவர் அதிகார தன்மையை கொண்டவர், அனைத்து பேரையும் அடக்கி ஆளும் பேச்சு தான் அவருடைய குணம் என்று பல விமர்சனங்கள் இணையதளங்களில் பரவி வனிதா உடைய இமேஜை ஸ்பாயில் பண்ணும் அளவிற்கு அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டார். அதனாலா என்னவோ தெரியவில்லை அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சீக்கிரமாகவே வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
Image result for vanitha son

ஆனால், அவருக்கு ஒய்ல்டு கார்டு சுற்றின் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக தொடர ஒரு வாய்ப்பும் கிடைத்தது. இதனால் அவர் வெளியே போயிட்டு எல்லாத்தையும் பார்த்துக் கற்றுக் கொண்ட பிறகு பிக்பாஸ் வீட்டில் தற்போது வரை நன்றாக விளையாடிக் கொண்டு வருகிறார். மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பிரீசிங் சுற்று நடந்து கொண்டிருந்தது.அது அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து அவர்களுடன் சந்தோசமான சம்பவங்களையும், உணர்ச்சிகளையும் பகிர்ந்து உணர்ச்சிபூர்வமான மனதை கலங்க வைக்கும் பல சம்பவங்கள் நடந்தது.

- Advertisement -

இதில் வனிதா உடையை இரண்டு மகள்கள் வந்தார்கள். ஆனால் தன்னுடைய மகன் வருவான் என்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். ஆனால் வனிதாவின் மகள்கள் வந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் குழந்தைகள் போல மாறிவிட்டனர். கும்மாளமுமாக லூட்டி அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதைதொடர்ந்து நேற்று கமலஹாசன் அவர்கள் அன்னை வனிதா என்று அவரை பெருமைப்படுத்தி நீங்கள் ஒரு சிறந்த தாய் என்று கூறியதால் அவருடைய இமேஜ் உயர்ந்துவிட்டது. என்னதான் நீங்க கடுகடுப்பாக நடந்துகொண்டாலும் ,தாயென்று வந்தால் உங்களுடைய அன்பும் பாசமும் எல்லையற்ற அளவு இருக்கிறது என்றும் கூறி அவரை புகழ்ந்தார்.

vanitha

மேலும், எனக்கு நீங்கள் ஓயல்கார்ட் ரவுண்டு மூலமாக உள்ள வந்து விளையாடிய விளையாட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உங்களிடையே நிறைய மாற்றங்கள் வந்து விட்டது என்று கூறி பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது மனவேதனையுடன் அவர் கூறியது, நான் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசத்தால் என்னுடைய குடும்பத்தையும், சுற்றியிருந்த உறவினர்களையும் எதிர்த்து பகையாளியாக ஆகிவிட்டேன். நான் மீண்டும் என் குடும்பங்களோடு இணைவேன் என்று நம்புகிறேன். ஆனால் நான் என் மகன் வருவான் என்று நிறைய எதிர் பார்த்திருந்தேன். பிக் பாஸ் என் மகனை எப்படியாவது அழைத்துக் கொண்டு வரும் என்று நம்பினேன்

-விளம்பரம்-

ஆனால், என் நம்பிக்கை எல்லாம் பொய்யானது. பரவாயில்ல ஓகே இன்னும் என்ன கோவம் என் மேல தெரியல கூடிய சீக்கிரம் என் மேல இருக்குற கோபம் நீங்கி என்ன புரிஞ்சுகிட்டு என்னை தேடி வருவான் என்று நான் நினைக்கிறேன் கடவுள் கிட்ட வேண்டிகிறேன் என்று அவர் கூறிய செய்தி மக்கள் மனதில் ஒரு சோகத்தையும் , பிக்பாஸில் அரங்கத்தையும் கண் கலங்க வைத்தது. முன்பெல்லாம் வனிதாவை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் எழுதி வந்தனர். ஆனால் இப்போது அவருடைய குணாதிசயங்களை கொண்டு அவரைப் பற்றி நல்ல கருத்துக்கள் பரவி வருகின்றன

Advertisement