சமந்தாவின் விவகாரத்து பின்னர் அவர் மீது எழும் விமர்சனங்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக வனிதா பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்து இருந்தது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு பின்னர் சமந்தா தொடர்ந்து நடித்து வந்ததாலும் பெமலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்ததாலும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதே போல சமந்தா, வயிற்றில் இருந்த குழந்தையை கருக்கலைப்பு செய்தார் என்றும் வதந்திகள் பரவியது. இப்படி ஒரு நிலையில் விவகாரத்து பின்னர் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக சமந்தா, தனது சமுக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் . அதில், பெண்களால் செய்யப்படும் விஷயங்கள் தொடர்ந்து தார்மீக ரீதியாக கேள்விக்குறியாக இருக்கிறது, ஆனால் ஆண்களை யாரும் கேட்பது இல்லை என்றால் நமக்கும் இந்த சமூகத்திற்குமே எந்த ஒரு தார்மிகமும் கிடையாது என்று ஒரு தத்துவத்தை பதிவிட்டு இருந்தார்.
இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து இந்த காரணத்தால் தான் வெளியேறினாரா நமீதா – வெளியான அதிர்ச்சி தகவல்.
அதே போல மற்றொரு பதிவில் தனிப்பட்ட பிரச்சனைக்காக உங்கள் உணர்ச்சிபூர்வமான முதலீடு என்னைமூழ்கடித்துவிட்டது, ஆழ்ந்த அனுதாபம் காட்டியதற்கும், பொய்யான வதந்திகள் மற்றும் கதைகளுக்கு எதிராக என்னை பாதுகாத்ததற்கும் நன்றி, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்று நான் குழந்தை பெற சம்மதிக்கவில்லை என்றும், இப்போது நான் கருக்கலைப்பு செய்தேன் என்றெல்லாம் சொன்னார்கள்.
விவாகரத்து என்பது மிகவும் வலிமிகுந்த செயல்முறையாகும், எனக்கு இதில் இருந்து மீள நேரத்தை எடுத்துக்கொண்டேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமந்தாவிற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக அறிவுறையை கூறியுள் வனிதா ‘இங்கே சமூகம் என்று எதுவுமே இல்லை பேபி, உனது வாழ்க்கையை நன்றாக வாழ கற்றுக் கொள் என்று அட்வைஸ் செய்ததோடு, ‘மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். அவர்களைப்பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நீ உன்னுடைய வாழ்க்கையை நோக்கி முன்னேறிக் கொண்டு போய்க் கொண்டே இரு, உனக்கு வலிமை இன்னும் கூடும்’’ என்று பதிவிட்டுள்ளார்.