ரோபோ ஷங்கர் கூட தான் எடுத்திருக்க- ஷாக் கொடுத்த சூர்யா தேவி. வைரலாகும் புகைப்படம்.

0
3087
robo
- Advertisement -

தன்னை சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார். ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அவள் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா.மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள்.

-விளம்பரம்-

மேலும், அவளை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் வனிதாவின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள நாஞ்சில் விஜயன்.சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன்.

தற்போது அவளுடன் டிக் டாக் செய்த வீடியோவை எடுத்து எனக்கும் அவளுடன் தொடர்பு இருப்பது என்று கூறுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா தேவி, ஒருவனுடன் டிக் டாக் எடுத்தால் அவனும் நானும் தொடர்பில் இருக்கோம் என்று அர்த்தமா ? அப்படி பார்த்தால் ராமர் அண்ணா கூட எடுத்திருக்கேன், ரோபோ ஷங்கர் கூட தான் எடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா தேவி.

-விளம்பரம்-
Advertisement