பச்சய எடுக்க முடியாதுன்னு தான் அந்த காலத்துல விவாகரத்து எல்லாம் நடக்கல. வனிதாவின் சர்ச்சை பேச்சி.

0
1999
vanitha

வனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் வெடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.

சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வனிதா பீட்டர் பவுலை முறையாக திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாகவே அவருடன் வெளியில் செல்வது, குடும்பத்தோடு இணைத்துக்கொண்டது என்று மட்டுமல்லாமல் வீட்டில் எளிமையாக திருமணத்தை நடத்தி அதற்கு பெயர் லவ் செலப்பெரேஷன் என்று கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் பீட்டர் பவுல் வனிதாவின் பெயரையும், வனிதா பீட்டர் பவுலின் பெயரையும் கையில் டாட்டூவாக குத்திக்கொண்டனர்.

இதையும் பாருங்க : நீயும் தான இப்படி கேட்ட உன்ன ஏன் அரெஸ்ட் பண்ணல் – ரசிகர்கள் தொல்லையால் பார்வதி அளித்த பதில்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, தனது கையில் குத்தி இருந்த பெயரை மாற்றியமைத்து டாட்டூ குத்தியுள்ளார். அவர் குதியுள்ள டாட்டூ ஒரு சைனீஸ் சிம்புலாம். அதற்கு அர்த்தம் டபுள் ஹபினஸ் என்கிறார் வனிதா. மேலும், போகி பண்டிகையில் தனது பழைய கேட்ட விஷயங்கள் கழிந்து புதிய சந்தோசங்கள் தொடரட்டும் என்று கூறியுள்ளார் வனிதா. தனது புதிய டாட்டூவை குத்திய வீடியோவை தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவில் 4 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

அந்த வீடியோவில் வனிதாவின் மகளும் உடன் இருக்க, அவரது மகள் இனிமேல் டாட்டூ குத்துவியா என்று கேட்க அதற்கு வனிதா, குத்துவேன் ஆனால், தெளிவா இனிமேல் அழிக்காத அளவிற்கு மாத்தாத அளவிற்கு இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளதாக கூறியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-77-1024x571.jpg

அதே போல அந்த வீடியோவில் விவாகரத்து எல்லாம் தமிழ் கலாச்சாரம் கிடையாதுனு சொல்ராங்க. அதெல்லாம் பொய். உண்மையில் அந்த காலத்துல புருஷன் பெயரை எல்லாரும் கையில் பச்சை குத்திக்கொள்வார்கள். ஆனால், அதையெல்லாம் அப்போது மாத்த முடியாது. எனவே, தான் வேறு வழியில்லாமல் அந்த புருஷன் அடிச்சாலும் புடிச்சாலும் அவங்க கூட வாழ்ந்தாங்க அதனால் தான் அப்போது விவாகரத்து நடக்கல என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement