அதுக்குன்னு கண்ட சாக்கடை எல்லாம் விஜய் ஆக முடியுமா – வனிதாவை கழுவி ஊற்றிய விஜய் ரசிகர்கள்.

0
10330
vanitha
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா பிரபல நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். மேலும், வனிதா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானது விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம்தான். சந்திரலேகா படத்திற்கு பின்னர் அவருக்கு அவ்வளவாக படவாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தற்போது வரை வனிதா விஜய்யுடன் நடித்தது குறித்து தான் அடிக்கடி பெருமையாக பேசிவருகிறார்.

-விளம்பரம்-

மேலும் எப்போது விஜய் பற்றி கேட்டாலும் அவர் தனக்கு நல்ல நண்பர் என்றும் சந்திரலேகா படத்தின் போது நடைபெற்ற பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து வருவார். ஆனால், சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு மீம் தான் விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கு பெற்ற அந்த ஒரு பேட்டி தான். அந்த பேட்டியை தான் அனைவரும் பார்த்திருக்கிறோமே.

இதையும் பாருங்க : ஆவலுடன் எதிர்பார்த்த Kgf வில்லன் ஆதிராவின் லுக் வெளியானது.

- Advertisement -

கடந்த சில வாரமாகவே வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த திருமண சர்ச்சையில் பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து கொண்டுதான் இருக்கிறார் வனிதா. அந்த வகையில் தனது திருமணத்தைப் பற்றி கருத்து தெரிவித்ததால் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வரவழைத்து தரக்குறைவான வார்த்தைகளில் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.

அந்த பேட்டியில் வனிதா கொடுத்த சில ரியாக்சன் விஜய் தனது திரைப்படங்களில் கொடுக்கும் க்யூட் ரியாக்ஷனை போல இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை ஷேர் செய்திருந்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்த வனிதா, நான் கூட அதை உணரவில்லை ஒரே மாதிரி ரியாக்சன் என்று குறிப்பிட்டு இருந்தார். வனிதாவின் இந்த பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் கடும் கடுப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

-விளம்பரம்-

அதில் ரசிகர் ஒருவர் அதுக்குன்னு கண்ட சாக்கடை எல்லாம் விஜய் ஆக முடியுமா அவர் ஒரு பெண்ணின் கணவர் உன்னை போல கிடையாது என்று பதிவிட்டிருந்தார் இதேபோல பல விஜய் ரசிகர்களும் வனிதாவை கழுவி ஊற்றிய வந்தார்கள் இதற்கு பதில் அளித்த வனிதா ஒரே ஒரு நல்ல மனிதர் மேலும் எனக்கு நல்ல நண்பர் உங்களை போல மக்களை கேலி செய்து சைபர் புல்லிங் செய்பவர் கிடையாது உங்களைப் போன்ற ஆட்களுக்கு வெற்றி என்பது என்றுமே வராது என்று கோபமாக பதிவிட்டுள்ளார்

Advertisement