வனிதா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம். பா ஜ கவினர் எச்சரிக்கை.

0
2542
- Advertisement -

தஞ்சாவூர் மக்களைப் பற்றி நடிகை வனிதா பேசியது சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்கள். வீட்டுக்கு வீடு இது சகஜம், பெண்களே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று வனிதா கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
பட்டுக்கோட்டையில் புகார் அளித்த காங்கிரஸ் நிர்வாகி

வனிதாவின் இந்தப் பேச்சால் தஞ்சாவூர் மக்கள் பெரும் கடுப்பில் இருக்கிறார்கள் தஞ்சாவூர் மக்கள் மட்டுமல்லாமல் எந்த ஊரில் இது போல அனைத்து கணவரும் இரண்டு பெண் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா அவரது பேச்சை உடனே திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் ப ஜ க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் பாருங்க : நயந்தாராவிற்கு ரசிகர் இருக்குன்னா, எனக்கும் தான் இருக்காங்க – வனிதா அதிரடி பேட்டி.

- Advertisement -

பா.ஜ.க-வின் கலை இலக்கியம் மற்றும் இந்து அறநிலையத்துறையின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக  இருக்கும் ராஜா என்பவர் தெரிவிக்கையில்,  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்கள். வீட்டுக்கு வீடு இது சகஜம், பெண்களே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனப் பேசியிருக்கிறார்.

தஞ்சை மாவட்டம், வரலாற்று பெருமைமிக்க ஊர். இதை இழிவுபடுத்தும்விதமாகவும் பெண்களை கொச்சைப்படுத்தும்விதமாக வனிதா பேசி இருக்கிறார்.  வனிதா அவரது பேச்சை உடனே திரும்ப பெற்று மன்னிபு கேட்க வேண்டும். காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வனிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

-விளம்பரம்-

Advertisement