பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.
https://www.youtube.com/watch?v=xJY5SndydZs
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார்.மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள். காவல்துறையே அவள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இதையும் பாருங்க : விசில் படத்தின் Unseen புகைப்படத்தை பதிவிட்ட ஷெரின் - நாயகன் போட்ட கமெண்டை பாருங்க.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார்..வனிதா விஜயகுமார், சூர்யா தேவி என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், நடிகை வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இரண்டு தரப்பினரிடமும் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
https://www.youtube.com/watch?v=JU3F6xnR_l0
இந்த விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனிதா சூர்யா தேவி இடமும் தன்னிடமும் போலீஸ் விசாரணை நடத்தியதாகவும் சூர்யா தேவி குறித்த ஆதாரங்களை போலீசாருக்கு தான் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சூர்யா தேவியை மன்னிப்பு கேட்க சொன்னார்கள் அவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் அவரால் என் உயிருக்கு ஆபத்து என்று தான் நான் புகார் கொடுத்திருக்கிறேன். அவரை பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளை எண்ணி அவரை சும்மா விடுவதாகவும் கூறியிருந்தார் வனிதா.
வனிதாவின் இந்த பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா தேவி. அதில், தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் நான் வீடியோ போடவில்லை. நேற்று காவல் நிலையத்தில் சென்றபோது வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்க கூறினார். ஆனால், நான் முடியாது என்று கூறிவிட்டேன். அதேபோல நானும் அவரை மன்னிப்பு கேட்க சொன்னதற்கு அவரும் முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் நான் வனிதாவை சும்மா விடப் போவது கிடையாது அவள் ஆனால் நான் என்று பார்த்துவிடலாம் என்று மீண்டும் சவால் விடுத்து இருக்கிறார் சூர்யா தேவி




