நீ என்ன அவளுக்கு வக்காலத்தா, டேய், அவ பிரபலம் கிடையாது டா – பேட்டியில் நாஞ்சில் விஜயனை வெளுத்து வாங்கிய சூர்யா அக்கா.

0
3405
surya

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா.ரசிகர்களை போலவே பல பிரபலங்களும் வனிதாவை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : வீட்டில் நடந்த வளைகாப்பு – அன்றே புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரம்யா. யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க.

- Advertisement -

அந்த வகையில் சூர்யா தேவி என்ற பெண் யூடுயூபில் அடிக்கடி வீடியோவை வெளியிட்டு வனிதாவை வெளுத்து வாங்கி வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோகளுக்கு பதிலடி கொடுத்த வனிதா, சூர்யா தேவிக்கு ஏதோ மனநல பிரச்சனை என்றும் கூறி இருந்தார். இருப்பினும் சூர்யா தேவி அடிக்கடி வனிதாவை வறுத்தெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், தனது யூடுயூப் சேனலில் சூர்யா தேவியை பேட்டி எடுத்து போட்டிருந்தார். அப்போது நாஞ்சில் விஜயன், வனிதா குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்து வந்த சூர்யா தேவி ஒரு கட்டத்தில் ‘நீ என்ன அவளுக்கு சப்போர்ட் செய்கிறாய்’ என்று கேட்டார். அதேபோல நாஞ்சில் விஜயன், வனிதாவை பிரபலம் என்று கூறியவுடன் ‘டேய் யாருடாபிரபலம் அவ ஒன்னும் பிரபலம் கிடையாது டா. ஏதாவது சொல்லி விடப் போறேன்’ என்று நாஞ்சில் விஜயனை வறுத்து எடுத்து விட்டார் சூர்யா அக்கா.

-விளம்பரம்-
Advertisement