லாஸ்லியாவை சந்திக்க இலங்கை செல்லும் போட்டியாளர். யாருனு பாருங்க.

0
44621
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிகமாக பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். அதோடு வனிதா விஜயகுமார் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளவர். இவர் திரையுலகில் பிரபலமானதை விட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மக்களிடையே அதிகமாகப் பேசப்பட்டார். அதோடு இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் (கதாநாயகியாக) தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இந்நிலையில் வனிதா குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தன் குடும்பத்தோடு சந்தோசமாக மகிழ்ந்து வருகிறார். தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் சிறப்பாக முடிவடைந்தது.

அதோடு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட ரசிகர்களை தெறிக்கவிட்டுச்சு கூட சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க இந்த பிக் பாஸ் சீசன் 3க்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று சொன்னால் வனிதாவை சொல்லாமல். ஏன்னா,அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில தீயா வேலை செய்து இருக்காரு. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்தவுடன் வனிதாவின் மூத்த மகளுக்கு சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இந்த சடங்கு நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து உள்ளார் . இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான். தற்போது வனிதா அவர்கள் ஸ்ரீலங்காவுக்கு போக போறேன்னு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். மேலும், வனிதா அவர்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று லாஸ்லியாவை மீட் பண்ண போகிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : பிகில் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டு ட்வீட் செய்த பிக் பாஸ் 3 பிரபலம். இவ்வளவு வெறித்தனமா.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது லாஸ்லியாவுக்கும், வனிதாவுக்கும் இடையே ஒரு நல்ல நட்புணர்வு போய்க்கொண்டிருந்தது. மேலும், வனிதா எல்லா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கவின், லாஸ்லியா காதலுக்கு மட்டும் சர்ட் பண்ணிட்டு தான் வந்திருந்தாங்க. ஆனால், லாஸ்லியா, வனிதாவை பத்தி புறம் பேசிட்டு வந்தாலும் வனிதா எப்போதுமே லாஸ்லியாவுக்கு சப்போர்ட் பண்ணி தான் இருந்தாங்க. ஏன்னா,வனிதாவுக்கு லாஸ்லியாவை பார்த்த என்னுடைய தங்கச்சி ப்ரீத்தா மாதிரி இருக்குன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அதனால லாஸ்லியா மேல ஒரு தனி பாசம்ன்னு கூட சொல்லலாம்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கொண்டாட்டதின் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், இதில் பிக்பாஸில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் பங்குபெற உள்ளார்கள். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் போது போட்டியாளர்கள் ஒருவருக்கு போட்டோ எடுத்துக்கொண்டு சந்தோஷமாக மகிழ்ந்து வந்த நிலையில் வனிதாவும்,லாஸ்லியாவும் எடுத்த செல்பீ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்காங்க. இந்நிலையில் இப்போது வனிதா ஸ்ரீலங்கா போறாங்கன்னு தெரிந்ததும் பிக்பாஸ் ரசிகர்கள் வனிதா இலங்கை போய் என்ன? வெடி குண்டு போட போறாங்கன்னு தெரியல என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement