மூன்றாவது திருமணம், மகனை எண்ணி வருந்திய வனிதா. மகள் சொன்ன செம ஆறுதல்.

0
34621
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் திருமணம் என்ற செய்தி தான் கடந்த சில நாட்களாக வனிதாவின் ரசிகர்களால் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பிரபல ஸ்டார் தம்பதிகளாக விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கும் மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
வனிதா – பீட்டர் பவுல்

இந்த நிலையில் வனிதா, பீட்டர் பவுல் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தியை வனிதா உறுதி செய்து இருந்தார்,. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நேற்று வனிதா தனது யூடுயூப் சேனலில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வருங்கால கணவர் பீட்டர் பவுல் குறித்தும் தனது திருமண திட்டங்கள் குறித்தும் பேசி இருந்தார் வனிதா.

- Advertisement -

ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னால் என்னிடம் காதலை தெரிவித்தார். என் மகள் அதை ஏற்றுக் கொள்ளும்படி என்னிடம் கூறினார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை தேவை. நாங்கள் திருமணம் செய்து சென்றுவிட்டால் உங்களைப் பற்றிய கவலையில் தான் இருப்போம். அதனால் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எனது மகள் ஜோவிகா சொன்னார்.அப்போது தான் நான் யோசித்தேன். எனக்கென்று யாரும் இல்லை. பெற்றோர், குடும்பம் இல்லை. என் குழந்தைகளையும் அதிகம் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

வீடியோவில் 10 : 35 நிமிடத்தில் பார்க்கவும்

மேலும், என்னுடைய திருமணத்தை பற்றி என் மகளுடன் பேசி கொண்டிருந்த போது என் மகன் குறித்து பேசினேன். ஏனென்றால் என் மகனை சந்தித்து 10 வருடங்கள் ஆகிறது. அவனிடம் பேசவும் இல்லை. இதெல்லாம் நடந்தால் அவன் இன்னும் தூரமாக போய் விடுவானோ என்று என் மகளிடம் சொன்னேன். ஆனால், என் மகளோ, அம்மா 10 வருஷம் ஆச்சி அதில் உங்களது 10 பிறந்தால் போச்சி 10 பிறந்தநாள் போச்சி.

-விளம்பரம்-

அவருக்கும் 10 பிறந்தநாள் போச்சி ஆனால், அவருடைய வாழ்க்கையை அவர் வாழ்ந்துட்டு இருக்கார். ஆனால், அவர் வாழ்க்கை அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். உங்களின் ஆசிர்வாதம் எப்போதும் அவருக்கு இருக்கும். அவர் வரவேண்டும் என்று நினைத்தால் அவர் கண்டிப்பாக வருவார் என்று கூறினால் என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement