பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணம் நேற்று (ஜூன் 27 ) அவரது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. மேலும், பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது மனைவி.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வனிதாவின் குடும்ப பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான், மேலும், வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும் இவருக்கு இரண்டுபெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஆனால், இவரது மகன் மட்டும் இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று பீட்டருடன் திருமணம் நடந்தது.
வனிதா, பீட்டரை திருமணம் செய்ததை அடுத்து பீட்டரின் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் அவர் பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்தார். பீட்டர் பாலும், அவரது மனைவி எலிசபெத்தும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார்.
முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மீண்டும் வனிதாவின் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் கிளப்பியிருக்கிறது.