சன் டிவியின் பிரபல சீரியலில் வனிதா. சீரியல் ஜோடியாளுடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

0
14131
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளா ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த சீசன் மிகவும் சர்ச்சையாகவும் சுவாரசியமாகவும் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தார் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளிலேயே பல்வேறு சண்டைகள் வெடித்தன இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்வதற்கு வழி தான் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர், செய்த சில நாரதர் வேலைகளால் நிகழ்ச்சியின் ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்களால் வெளியேற்றப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-
Vanitha

ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றதும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்ற உணர்ந்த ரசிகர்கள் மீண்டும் வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஏற்றார்போல வனிதாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற போதெல்லாம் சர்ச்சைகளும் சண்டைகளும் நிறைந்தே காணப்பட்டது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எறியதற்க்கு வனிதா ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். இந்த நிலையில் வனிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிக்கப்போவதாக சில நம்பகமான தகவல்கள் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வந்தன.

இதையும் பாருங்க : வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா. வைரலாகும் புகைப்படங்கள்.

- Advertisement -

ஆனால், தற்போது வனிதா சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ‘சந்திரலேகா’ சீரியலில் நடிக்க போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக, வனிதா ‘சந்திரலேகா’ நடிகர்களுடன் வனிதா இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான வனிதா, தற்போது சின்னத்திரையிலும் சந்திரலேகா சீரியல் மூலம் அறிமுகமாக இருக்கிறார் என்பது தான் சிறப்பு. மேலும், சந்திரலேகா தொடரில் வனிதாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம் வனிதா.

நடிகை வனிதா பிரபல சினிமா நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். மேலும், வனிதா சினிமாவில் அறிமுகமானது 1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் மாணிக்கம், தேவி போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே வனிதா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நான் ராஜாவாகப் போகிறேன் நச்சுன்னு இருக்கு போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், 2015ஆம் ஆண்டு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல் என்ற படத்திற்கு கதை எழுதி அந்த படத்தையும் தயாரித்தும் இருந்தார் வனிதா. ஆனால், அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருந்தது.

-விளம்பரம்-
Image result for chandralekha serial

அதன் பின்னர் பல்வேறு பண சிக்கல்களையும் குடும்ப பிரச்சனைகளை சந்தித்த வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் காண முடிந்தது. இந்த நிலையில் வனிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும்குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வனிதாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் புதிய ப்ராஜெக்ட்காக படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. விரைவில் அதைப்பற்றிய அப்டேட் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது இந்த புரைபடத்தின் மூலம் வனிதா கூறியிருந்த அந்த ப்ராஜெக்ட் சந்திரலேகா தொடர் தான் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement