விஜய் டிவியின் பிரபல சீரியலில் வனிதாவா ? கண்டிப்பா வில்லியாக தான் இருக்கும்..

0
18726
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் டிஆர்பி கிங்காக இருந்து வந்தார் வனிதா. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த சீசன் மிகவும் சர்ச்சையாகவும் சுவாரசியமாகவும் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தார் வனிதா. இவர், செய்த சில நாரதர் வேலைகளால் நிகழ்ச்சியின் ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்களால் வெளியேற்றப்பட்டு இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றதும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்ற உன்னத ரசிகர்கள் மீண்டும் வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

-விளம்பரம்-
vanitha

அதற்கு ஏற்றார்போல வனிதாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற போதெல்லாம் சர்ச்சைகளும் சண்டைகளும் நிறைந்தே காணப்பட்டது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எறியதற்க்கு வனிதா ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். இந்த நிலையில் வனிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிக்கப்போவதாக சில நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று உள்ளது.

இதையும் பாருங்க : தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் பேட்டியில் இருந்து எழுந்த சென்ற மோகன் வைத்யா.. அப்படி என்ன கேட்டாரு..

- Advertisement -

ஒருவேளை இந்த சீரியலில் வனிதாவை கொண்டுவந்தால் பிக்பாஸில் போல இந்த சீரியலின் டிஆர்பியை வனிதா உயர்த்தி விடுவார் என்று விஜய்டிவி எண்ணுகிறது என்னவோ. அதேபோல ஒருவேளை வனிதா இந்த சீரியலில் நடிப்பதாக இருந்தால் அவருக்கு நெற்றியில் வில்லி கதாபாத்திரம்தான் கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ஏனேனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை பார்த்தவர்களுக்கு இவர் எப்படிப்பட்ட ஆள் என்பது நன்றாகவே தெரியும். இதனால் இவருக்கு வில்லி கதாபாத்திரம் தான் மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

Image result for pandian stores

நடிகை வனிதா பிரபல சினிமா நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். மேலும், வனிதா சினிமாவில் அறிமுகமானது 1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் மாணிக்கம், தேவி போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே வனிதா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நான் ராஜாவாகப் போகிறேன் நச்சுன்னு இருக்கு போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், 2015ஆம் ஆண்டு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல் என்ற படத்திற்கு கதை எழுதி அந்த படத்தையும் தயாரித்தும் இருந்தார் வனிதா. ஆனால், அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருந்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு பண சிக்கல்களையும் குடும்ப பிரச்சனைகளை சந்தித்த வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் காண முடிந்தது. இந்த நிலையில் வனிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும்குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வனிதாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் புதிய ப்ராஜெக்ட்காக படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. விரைவில் அதைப்பற்றிய அப்டேட் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதை தான் வனிதா அந்த பதிவில் மறைமுகமாக தெரிவித்து உள்ளாரா என்பதம் தெரியவில்லை. விரைவில் இதைபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement