தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் பேட்டியில் இருந்து எழுந்த சென்ற மோகன் வைத்யா.. அப்படி என்ன கேட்டாரு..

0
9899
mohan
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர் தான் மோகன் வைத்தியா. மோகன் வைத்தியா பற்றி பல பேர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த மோகன் வைத்தியா என்பவர் ஒரு கர்நாடக இசை பாடகர். அதுமட்டும் இல்லைங்க செவ்வியல் நடன கலைஞர், வயலின் கலைஞர் என இசை துறையில் சிறந்து விளங்கினார்.அதோடு சினிமா துறையில் தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும்,நிகழ்ச்சிகளிலும் கூட பணியாற்றி உள்ளார். மோகன் வைத்தியா நடிகர் மற்றும் தொகுப்பாளர்,பாடகர்,இசை கலைஞர் என பன்முகங்களை கொண்டவர். அது மட்டும் இல்லைங்க இவர் ராஜேஷ் வைத்யாவின் அண்ணனும் ஆவார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக மோகன் வைத்தியா கலந்துகொண்டார்.

-விளம்பரம்-
Image result for mohan vaidya angry

அதில் வயது அதிகம்(60க்கு மேல்) உடைய போட்டியாளர் இவர் மட்டும் தான். ஆனால், சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மோகன் வைத்தியா. மேலும்,இவருடைய தம்பி ராஜேஷ் வைத்தியா ஆவார்.இவரும் ஒரு பிரபல வீணை வாசிப்பாளர். இவர் சினிமா உலகில் பல படங்களில் இவரது வீணை கை வசம் காட்டி பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் எல்லாம் செம ஹிட் என்று கூட சொல்லலாம். அதிலும் குறிப்பாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து வசூல் வேட்டையை தந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த ‘சிரிச்சு சிரிச்சு வந்தா’ என்ற பாடலை ராஜேஷ் வைத்யா அவர்கள் தான் வாசித்தார். அது மட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3ன் பினாலே அப்பவும் ராஜேஷ் வைத்யா அவர்கள், கமல்ஹாசன் அவர்கள் நடித்த படங்களிலுருந்த பாடல்களை வீணையில் வாசித்தார்.இது அனைவருக்கும் தெரிந்தது இருக்கும்.

இதையும் பாருங்க : ட்விட்டரில் சாதனை படைத்த ‘வலிமை’ என்ற தலைப்பை அஜித்துக்காக விட்டுகொடுத்தது யார் தெரியுமா ?

- Advertisement -

இப்படி சினிமா மற்றும் இசைத் துறையில் பிரபலமான மோகன் வைத்தியாமற்றும் ராஜேஷ் வைத்தியா இவர்கள் இருவரும் இணைந்து பேட்டி ஒன்று அளித்துள்ளார்கள். அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களையும், பழைய நினைவுகளையும் பற்றி இருவரும் பகிர்ந்து வந்திருந்தார்கள். திடீரென்று மோகன் வைத்தியா தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நான் நிகழ்ச்சியை விட்டு கிளம்புகிறேன் என கூறினார். அதைக் கேட்டு தொகுப்பாளர் கொஞ்சம் ஆடிப் போனார் என்றுகூட சொல்லலாம். பின்பு பேட்டி இறுதியில் இருவரும் அழகாக பாடல்களை பாடியும் , இசைத்தும் பேட்டியை முடித்துள்ளார்கள்.

Image result for mohan vaidya angry
Image result for mohan vaidya angry

ஆனால், என்ன காரணத்தினால் மோகன் வைத்தியா நிகழ்ச்சியை விட்டு செல்கிறேன் என்று கூறினார் என பல கேள்விகளை இணையங்களில் எழுப்பினார்கள். உண்மையில அதுவேறொன்றும் இல்லை, மோகன் வைத்யாவை பேட்டி கண்ட தொகுப்பாளர் அவரிடம், நீங்க பல சமயங்களில் கூறி இருக்கிறீர்கள் , உங்களுக்கு மிகவும் கோபம் வரும் என்று, உண்மையில் மோகன் வைத்யாவிற்கு கோபம் வருமா? என்று கூற, உடனே கடுப்பான மோகன் வைத்யா, சரி நான் கிளம்புறேன் நீங்க பேசுங்க அப்டின்னுசொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டார். அதுக்கு பிறகு மோகன் வைத்யா பேசும்போது, எனக்கு கோபம் வரும் தான். ஆனால், அது மூன்று, நான்கு நிமிஷத்திலே அந்த கோபம் போய்விடும் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement