பிக் பாஸ் 5வில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துகொள்வது பற்றி கேட்ட நிருபர் – பங்கமாக கலாய்த்த வனிதா.

0
3529
lakshmi
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா.

வீடியோவில் 12 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.அதே போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதையும் பாருங்க : எல்லா சீசன்லையும் என் பேரு வந்துருது – பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து பிரபல நடிகை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து கேலி செய்துள்ளார். விஜய் டிவியில் விரைவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

This image has an empty alt attribute; its file name is image-33.png

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட போது, அந்த அம்மா பெரிய பணக்காரி, அவங்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்று கலாய்த்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸில் தான் கலந்துகொள்ளவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement