எல்லா சீசன்லையும் என் பேரு வந்துருது – பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து பிரபல நடிகை.

0
2535
Bb5
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஜனவரி மாதம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தமிழில் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ப்ரோமோ கூட வெளியாகி இருந்தது. இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பாருங்க : என் அப்பா கார் ட்ரைவர், அதனால் சிறு வயதில் – புதிய கார் வாங்கிய ஜாக்லினின் உருக்கமான பதிவு.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக் பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை.

பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் குக்கு வித் கோமாளி தீபா கலந்துகொள்வதாக தகவல் வெளியானது இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட போது, பிக் பாஸ்ல கலந்துகிட என்னையா கூப்டாங்க, போனா ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிடைக்கும் நல்ல வருமானம் தான்.ஆனா, பணத்தை விட சுயமரியாதை முக்கியம். நான் காசு பணத்திற்கு அடிமை அல்ல, அன்புக்குத்தான் அடிமை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement