4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன் – ஒருவனுக்கு ஒருத்திக்கு புதிய தத்துவத்தை சொன்ன வனிதா.

0
57337
vanitha
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட இதனை உறுதி செய்ததாக செய்தி வெளியிடப்பட்டது. இதனை மறுத்துள்ள வனிதா, என்னைப் பற்றி சினிமா விகடன் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது.

-விளம்பரம்-
Image

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட குற்றமா, உடனே அவர்களுக்குத் திருமணம் என யாராவது சொன்னால் அதை செய்தியாக்கிவிடுவது தவறில்லையா? என்னை இந்த செய்தி மிகவும் காயப்படுத்தியிருக்கிறது.

இதையும் பாருங்க : 50 வயதிலும் இப்படியா, துண்டை சுற்றிக்கொண்டு தபு கொடுத்துள்ள போஸ்.

- Advertisement -

சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதர்க்கு சினிமா விகடனும் மன்னிப்பு தெரிவித்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இப்படி ஒரு நிலையில் இவர் பிக்கப் டிராப் படத்தில் நடிக்கிறார். அதற்கான புகைப்படம் தான் இது தெரியவந்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் பிக்கப் டிராப் படத்தின் பிரெஸ் மீட்டில் பங்கேற்ற வனிதாவிடம், நான்காம் திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு நான் 4 இல்ல 40 கூட கல்யாணம் பண்ணுவேன். நான் சாமியாராக போவது இல்லை என்று கூறியுள்ளார். மேலும், ஒருவனுக்கு ஒருவன் பற்றி கேட்டதற்கு, இந்தியாவில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தவறாக புரிந்துகொள்கிறார்கள்.

-விளம்பரம்-

மேல் நாட்டில் தான் அதை சரியாக செய்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நாம் ஒருவருடன் இருக்கும் போது அவர்களுடன் உண்மையாக இருக்க வேண்டும். பின்னர் அவர்களிடம் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்தால் அந்த ஒருவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று புதிய அர்த்தத்தை கூறியுள்ளார். மேலும், வழக்கம் போல ஒரு தனி பெண்ணாக தான் சாதித்து காட்டியுள்ளேன் என்று கூறிய வனிதா பத்திரிகையாளரை கைத்தட்டவும் சொன்னது தான் வேடிக்கை.

Advertisement