நண்பனுக்காக திருமணமே செய்யாமல் இருந்த நண்பன் – கேப்டன் திருமணத்திற்கு பின் பிரிந்த காரணம் – இறப்பில் கண் கலங்கிய கேப்டன்.

0
483
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேப்டன் கடந்த 28 ஆம் தேதி காலமானார். கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. நேற்று மாலை விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் பற்றி பல பேர் பேசினாலும், கேப்டன் என்று சொன்னால் இப்ராஹிம் ராவுத்தர் பற்றியும் பேசி தான் ஆக வேண்டும்.

-விளம்பரம்-

மதுரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டு இருந்த விஜயகாந்தை சென்னைக்கு தைரியமாக அழைத்து வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் சினிமா வாய்ப்புத்தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது நிறைய சினிமா கம்பெனிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம் ஆறுதல் சொன்னதோடு நிற்காமல் திட்டியவர்களைத் தேடிப்போய் சண்டையும் போட்டு வந்திருக்கிறார் ராவுத்தர்.

- Advertisement -

விஜய்காந்த சினிமா மார்க்கெட் இழந்த நேரத்தில் அவரை நிலைநிறுத்த வேண்டி அவருக்கென்று ‘ராவுத்தர் பிலிம்ஸ்’ என்று தனியாக தயாரிப்பு நிறுவனத்தை இப்ராஹிம் ராவுத்தர் ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, ராவுத்தரின் சினிமா கம்பெனி பாண்டிபஜாரில் இருக்கும் ராஜபாதர் தெருவில் இருந்தது. அங்கே தினசரி 100 பேருக்கு மதியச்சாடு போடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் பிரியாணிக்காக பெரிய கூட்டமே காத்திருக்கும். சினிமா சான்ஸ் தேடி அலையும் பல உதவி டைரக்டர்கள் பசியாறிக் கொள்ளும் இடமாக ராவுத்தர் பிலிம்ஸ் இருந்தது.

அந்த காலத்தில் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்களுக்கு சினிமாவை இயக்கும் வாய்ப்பை யாரும் தரமாட்டார்கள். ராவுத்தர் தைரியமாக சான்ஸ் கொடுத்தார். ஆபாவாணன், அரவிந்தராஜ், செல்வமணி, செந்தில்நாதனை டைரக்டர்களாக அறிமுகம் செய்தார். தனது ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த ‘புலன் விசாரணை’ படத்தில்தான் சரத்குமாரை முதன்முதலாக அறிமுகம் செய்தார். அதுமட்டுமல்ல லிவிங்ஸ்டன், ஆனந்தராஜை அறிமுகம் செய்தார்.

-விளம்பரம்-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்தவர். மூப்பனார் மீது மிகுந்த பிரியம் கொண்டவர் ராவுத்தார். அவர் சாகும்வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பின் அ.தி.மு.க.வில் இணைந்தார். நண்பன் விஜயகாந்த் மீது மிகுந்த பாசம் கொண்டவர். திருமணம் செய்து கொண்டால் தனக்கு வரும் மனைவி நட்பை பிரித்து விடுவாளோ என்று நினைத்து கல்யாணமே செய்து கொள்ளாதவர்.

விஜயகாந்த் மனைவி பிரேமலாதாவை பெண் பார்த்து அவருக்கு கட்டி வைத்தவர் ராவுத்தர்தான். ஆனால், திருமணத்திற்கு பிறகு எல்லாம் மாறி விட்டது. பின் ராவுத்தருக்கு சேர வேண்டிய பணம், சொத்தை எல்லாம் விஜயகாந்த் பிரித்துக் கொடுத்துவிட்டார். இருந்தாலும், தன்னுடைய நண்பனை பிரிந்து விட்டோமே என்ற வருத்தம் அவருடைய மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. ராவுத்தரின் இறுதி சடங்கில் விஜயகாந்த் கதறி அழுதது அவர்களுடைய நட்புக்கு சாட்சியாக இருந்தது. பின் சிறிது காலம் ராவுத்தர் ஃபிலிம்ஸ் முடங்கி கிடந்தது. தற்போது மீண்டும் படத்தை இயக்க இருக்கிறது.

Advertisement