தனுஷ், நயன்லாம் ஏன் ஓட்டு போடல – கேள்வி கேட்ட பிரபல நடிகை (ஆனா, இவரே ஒட்டு போடலன்றது தான் வேடிக்கை)

0
1660
nayan
- Advertisement -

தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்றுமுடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நேற்று பல்வேறு மக்களும் ஆவலுடன் வாக்களித்தனர்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமா பிரபலன்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஜீவா, விஷ்ணு விஷால், சரத்குமார், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிலும் நேற்று அஜித், ரசிகரின் செல்போனை புடிங்கியது, விஜய் சைக்கிளில் வந்தது போன்றவை நேற்று முதல் பேசும் பொருளானது.

- Advertisement -

இப்படி பல உச்ச நதிச்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய நிலையில் ஒரு சில நடிகர் நடிகைகள் வாக்களிக்காமல் இருந்தது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகையான காஸ்த்ரி ஓட்டு போடாத பிரபலங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா. விஷால், நயன்தாரா, வெற்றிமாறன் , விக்னேஷ் சிவன் ஆகியோர் ஓட்டு போட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நடிகை கஸ்தூரியே இந்த முறை ஒட்டு போடல் வில்லை என்பது தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை காஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement