இந்த வாரமும் குக்கு வித் கோமாளி இல்லையா ? இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக். மன்னிப்பு கேட்ட ஹாட் ஸ்டார் நிறுவனம்.

0
1392
cooku

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பானது என்பதால் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இறுதி போட்டி 6 மணிக்கு துவங்கி 6 மணி நேரம் ஒளிபரப்பானது. இதனால் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் குக்கு வித் கோமாளி சனிக்கிழமை மட்டும் ஒளிபரப்பானது. அதே போல கடந்த வார ஞாயிற்று கிழமை சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா காலை 11 மணி முதல் 9 மணி நேரம் இரவு 8 மணி வரை ஒளிபரப்பானதால் கடந்த ஞாயிற்று கிழமையும் குக்கு வித் கோமாளி ஒளிபரப்பப்படவில்லை.

- Advertisement -

இப்படி கடந்த இரண்டு வாரங்களாக குக்கு கோமாளி நிகழ்ச்சியை அதன் ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்துவந்தனர். இந்த வாரமாவது சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகும் என்று அவளோடு இருந்தனர். அதே போல குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பாக ஹாட்ஸ்டார் VIP சந்தாதாரர்களுக்கு முன்கூட்டியே ஒளிபரப்பாகிவிடும். இப்படி ஒரு நிலையில் இன்று ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப தாமதமாக ரசிகர்கள் பலரும் இந்த வாரமும் குக்கு வித் கோமாளி இல்லையா என்று அதிர்ச்சி அடைந்தார்கள்.

பல்வேறு ரசிகர்களும் குக்கு வித் கோமாளியின் தாமதம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு ஹாட்ஸ் ஸ்டாரின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடியை டேக் செய்தனர்.மேலும், ட்விட்டரில் இந்திய அளவில் குக்கு வித் கோமாளி என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. சில தொழில்நுட்ப காரணத்தினால் தாமதமாகி விட்டதாக மன்னிப்பு கோரியது ஹாட் ஸ்டார். இருப்பினும் ஒரு சில மணி நேரத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது குக்கு வித் கோமாளி.

-விளம்பரம்-
Advertisement