தப்பு தான் மன்னிச்சுடு – வயது வித்யாசம் பார்க்காமல் வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட குட்டி பத்மினி

0
32813
vanitha

கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.

வனிதாவிற்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது முறைப்படி திருமணம் இல்லை காதலின் கொண்டாட்டமா என்பதை தெளிவாக கூறாமல் வனிதா ரசிகர்களை குழப்பி கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

இதையும் பாருங்க : நடிகர் விஷாலிடமே லட்சக் கணக்கில் ஆட்டையை போட்ட பெண் – போலீசில் புகார்.

- Advertisement -

வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பீட்டர் பவுலும் சினிமா துறையில் பணிபுரிபவர் தான். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில் தான் வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இருக்கும் பீட்டரை திருமணம் செய்து கொண்டதால் வனிதாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகையான குட்டி பத்மினி, வனிதாவிற்கு அறிவுரை கூறி வாங்கி கட்டிக்கொண்டதால் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் குட்டி பத்மினி குறித்து ட்வீட் செய்த வனிதா, டியர் பத்மினி உங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும் ஏனென்றால் நீங்களும் என்னை பற்றி இங்கே கூறவில்லை நீங்கள் என்னை பற்றி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் மீது நான் மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் நீங்கள் உங்களுடைய உண்மையான நோக்கத்தை நிரூபித்து விட்டீர்கள்.

-விளம்பரம்-

உங்களிடம் ஒன்றை மட்டும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய குழந்தைகள் பற்றிய மோசமான கருத்தால் உங்களை நான் வெறுக்கிறேன். நான் ஒன்றும் உங்களைப்போல் கிடையாது என்று பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த பதிவிற்கு பதிலளித்த குட்டிபத்மினி ஒருவேளை நான் உன்னை காயப்படுத்தி இருந்தால் அதை நினைத்து நான் வருந்துகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement