இவ்வளவு பாசமாக இருந்த பிள்ளையா இப்போ அம்மாவை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் – வைரலாகும் Throwback வீடியோ.

0
240
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-558-1024x737.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால், இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார்.அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவைடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

- Advertisement -

வனிதாவின் திருமண வாழ்க்கைகள் :

ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் பிரச்சனை செய்துவிட்டு பாதியில் வெளியேறினார் வனிதா. ஆனாலும், இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

மூன்று திருமணம் :

அதன் பின்னர் இவர் இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார். பின் வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்து வந்தார். இப்படி வனிதா மூன்று முறை திருமணம் செய்தும் தோல்வியில் தான் முடிந்து உள்ளது.

-விளம்பரம்-

வனிதா மகன் ஸ்ரீஹரி :

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். இப்படி ஒரு நிலையில் வனிதா தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வனிதா குறித்த கேள்விக்கு ஸ்ரீஹரி சொன்ன பதில் :

இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ஸ்ரீஹரியிடம் ‘ வனிதாவோட பையனா நீங்க’ என்று கேட்டிருந்தார். அதற்கு ஸ்ரீஹரி ‘நான் ஆகாஷோட பையன் ப்ரோ’ என்று கூறி வனிதாவிற்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்து இருந்தார். இதுகுறித்து பேசிய எனக்கும் அவனுக்கும் எந்த ஒரு மனஸ்தாவும் கிடையாது நேரில் பார்த்தால் பலர் என்று அறைந்து விடுவேன் அவன் ஆள் வளந்துவிட்டான் அறிவு வளரவில்ல. ரெண்டும் லூசு தான். அறிவும் வளரவில்லை அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என்றுகூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement