ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ள சன் டிவி சீரியல் நடிகை. அவரே சொன்ன காரணம்.

0
1015
- Advertisement -

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை சன் டிவி சீரியல் நடிகை தவற விட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் இவர் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு முன் நெல்சன் அவர்கள் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருந்தார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

அதோடு பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்த படம் குறித்து யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த படம் இதுவரை உலக அளவில் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மிர்ணா குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மிர்ணா. இவர் மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருக்கிறார். அதோடு ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் நடிகன் மிர்ணாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த வாரம் வெளியாகி இருக்கும் பர்த்மார்க் என்ற படத்தில் கதாநாயகியாக மிர்ணா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சைத்ரா குறித்த தகவல்:

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் மிர்ணா நடித்திருந்த கதாபாத்திரத்தில் சன் டிவி நடிகை நடிக்க இருந்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை, நடிகை சைத்ரா ரெட்டி. இவர் முதன் முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்குப்பின் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சைத்ரா நடித்த படம்:

இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க முதலில் இவரிடம் தான் இயக்குனர் நெல்சன் கேட்டிருக்கிறார். ஆனால், சைத்ராவால் நடிக்க முடியாத காரணத்தினால் தான் ரஜினியின் மருமகளாக ஜெயலலிதா படத்தில் மிர்ணா நடித்திருந்தார்.

Advertisement