தன் முன் நடனமாடிய நடிகை, சங்கடத்தில் ரஹ்மான் செய்த செயல் – தற்போது வைரலாகும் வீடியோ. தமிழ் ரசிகர்களின் கமெண்ட்ஸ்

0
850
arrahman
- Advertisement -

இந்திய சினிமா துறையை பொறுத்த வரை ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். அதே போல உலக சினிமா அளவில் மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை எந்த ஒரு இந்தியரும் வென்றது இல்லை என்ற ஒரு நிலை இருந்ததை மாற்றியது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தான்.

-விளம்பரம்-

ஏ ஆர் முன் நடனமாடிய நடிகை :

ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மட்டுமல்லாது பல இந்தி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவ்வளவு ஏன் சமீபத்தில் வெளியான தனுஷின் ‘அத்ராங்கி ரே’ படத்திற்கும் ஏர் ஆர் ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானை நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை ஒருவர் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

ஒதுங்கி போன ரஹ்மான் :

2019 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள ஒரு நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த திவ்யங்க என்பவர் ஏ ஆர் ரஹ்மான் முன்பு நடனமாடுகிறார். அப்போது அவரை தொட முற்படும் போது நகர்ந்து செல்கிறார் ஏ ஆர் ரஹ்மான். இந்த வீடியோவை தற்போது ட்விட்டர் வாசி ஒருவர் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பலர், இதில் கண்டிப்பாக அவர் அசவுகிரியமாக உணர்வது தெரிகிறது. அவரை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

பதிவை நீக்கிய ட்விட்டர் வாசி :

இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த வீடியோ ட்விட்டர் வாசி நீக்கிவிட்டார். இருப்பினும் வேறு ஒரு யூடுயூப் வீடியோவை இணைந்துள்ளோம். ஏ ஆர் ரஹ்மானுக்கு பாலிவுட்டில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல, பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் இருந்த போது, பாலிவுட்டில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். அந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஏ ஆர் ரஹ்மானிடன் ஆர் ஜே, ஏன் நீங்கள் அதிக ஹிந்தி படங்களில் அதிகம் பணியாற்றுவது இல்லை என்று கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

பாலிவுட் குறித்து ஏ ஆர் ரஹ்மான் :

அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான், நான் நல்ல படங்களை என்றுமே வேண்டாம் என்று சொன்னதில்லை .ஆனால், எனக்கு எதிராக ஒரு கூட்டம் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். முகேஷ் சோப்ரா என்னிடம் வந்தபோது அவருக்கு இரண்டு நாளில் நான்கு பாடல்களை நான் கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார், பலபேர் உங்களிடம் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் உங்களைப் பற்றி கதை கதையாக சொன்னார்கள் என்று கூறினார்.

ஏ ஆருக்கு எதிராக இருக்கும் பாலிவுட் கூட்டம் :

அவர் அப்படி சொன்னதற்கு பின்னர் தான் எனக்கு புரிந்தது, நான் ஏன் குறைவான இந்தி படங்களை செய்கிறேன் என்று. அதனால்தான் எனக்கு நல்ல படத்தில் வாய்ப்பும் வருவது கிடையாது. ஏனெனில் ஒரு கூட்டமே எனக்கு எதிராக வேலை செய்து கொண்டு இருக்கிறது என்று. அவர்கள் என்ன தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியாமலேயே அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு கூட்டம் இவற்றிலிருந்து என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நான் விதியை நம்புபவன் அனைத்தும் கடவுளிடம் இருந்து தான் வருகிறது என்பதை நான் நம்புகிறேன். எனவே, யார் வேண்டுமானாலும் என்னிடம் வரலாம் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள் என்று கூறியிருந்தார் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement