வனிதாவிற்கு கொடுத்த சூப்பர் பவர் ஞாபம் இருக்கா.! அத வெச்சி செம ட்விஸ்ட் கொடுக்க போகும் பிக் பாஸ்.!

0
22290
vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சி பல வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வனிதா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கஸ்தூரி வைல்டு கார்டு போட்டியாளராக அனுப்பி வைத்தனர். ஆனால், அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒருகண்டண்டும் இல்லை. எனவே, அவர் சென்ற வேகத்திலேயே மீண்டும் வெளியில் வந்து விட்டார். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் உள்ளே சென்ற வனிதா தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் சென்ற நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றது.

இதையும் பாருங்க : கடைசியில் பிக் பாஸையே குறை சொன்ன வனிதா.! வச்சி செய்த கமல்.! கலாய்த்த தர்ஷன்.!

- Advertisement -

எனவே, வனிதாவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடந்த வாரம் இவர் திட்டம் போட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது இந்த வார தலைவரான வணிதாவிற்கு ஒரு சிறப்புப்பவர் ஒன்றும் கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அந்த பவர் என்னவென்று பிக்பாஸ் அறிவிக்கவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மோகன் வைத்தியா சாக்க்ஷி ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக சென்றனர். இன்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் வெளியேறியது இரண்டாவதுப்ரோமோ மூலம் தெரிய வந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் மோகன் வைத்திய மற்றும் அபிராமி இருந்து வருகிறார்கள்.

எனவே, வனிதாவுக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் மூலம் இந்த இருவரில் யாரேனும் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் தங்க வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் அது கண்டிப்பா அபிராமியாகத் தான் இருக்கும். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ரகசிய அறை பயன்படுத்தப்படவில்லை. எனவே, ஒருவேளை அடுத்த வாரம் வனிதா வெளியேறினால் கூட அவரை ரகசிய அறையில் வைக்கப் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement