பிகில் படம் குறித்து வனிதா போட்ட ட்வீட். இப்படி ஒரு ரகசியம் இருக்கா ?

0
15087
Vijay-vanitha
- Advertisement -

விஜய் ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டிருந்த பிகில் படம் இன்று திரையரங்குகளில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . மேலும்,விஜய் ரசிகர்கள் பயங்கர ஆர்பாட்டத்திலும்,உற்சாகத்திலும் தியேட்டர்களில் பட்டைய கிளப்புகிறார்கள். இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் ட்ரைலர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இது பிகில் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தது. இருந்தபோதிலும் இணையதளங்களில் பிகில் படம் குறித்து பல சர்ச்சைகளும், விவாதங்களும் போய்க் கொண்டு இருந்த நிலையில் இன்று பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து தமிழகமே கலகட்டியது. இன்று பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கருத்துகளை பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : பிகில் – விமர்சனம்.

- Advertisement -

இந்நிலையில் சினிமாவில் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் பிகில் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, 24 வருடங்களுக்கு முன்னால் நானும், தளபதி விஜய் அவர்களும் சேர்ந்து நடித்த ‘சந்திரலேகா’ படம் தீபாவளிக்கு வெளிவந்தது. அதுமட்டும் இல்லாமல் முதன் முதலாக தீபாவளிக்கு ரிலீஸான தளபதி விஜயின் படம் சந்திரலேகா தான். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருப்பதில் எனக்கு ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. மேலும்,இந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் தெறிக்கவிடுகிறது என்றும் கூறியிருந்தார். இவருடைய கருத்தை பார்த்து ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் லைக் செய்து வருகிறார்கள். மேலும், பிகில் படத்தின் கதாநாயகி நயன்தாரா அவர்கள் எப்போதும் எந்த ஒருவரின் கருத்துக்கும் பதிலளிக்க மாட்டார். ஆனால், விஜய்யின் பிகில் படத்திற்காக வனிதாவின் கருத்துக்கு லைக் செய்து உள்ளார். இது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.

Image result for chandralekha vijay"

வனிதா விஜயகுமார் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளவர். இவர் திரையுலகில் பிரபலமானதை விட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மக்களிடையே அதிகமாகப் பேசப்பட்டார். அதோடு இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் (கதாநாயகியாக) தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவை திட்டிக் கொண்டு வந்த ரசிகர்கள் தற்போது பிகில் படம் சம்பந்தமான கருத்து தெரிவித்த உடன் ரசிகர்கள் அவரை பாராட்டியும், வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும்,நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு சரவெடிய போட்டு ரசிகர்களை வெறித்தனமாகி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement