உங்க அரசியல்லாம் என்கிட்ட வேணாம், யாருக்கும் பயந்தவ நான் இல்ல – தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்து வனிதா.

0
556
vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன். தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.

- Advertisement -

மக்கள் மனதில் இடம்பிடித்த விக்ரமன் :

ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல செய்து நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.

இறுதி வாரத்தில் விக்ரமனுக்கு நேரடி ஆதரவு :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் விக்ரமனுக்கு முதன் முறையாக நேரடியாக தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் திருமாவளவன் ‘Bigboss-இல் நடைபெறும் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். Hostar வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம்.- தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

வனிதா கண்டனம் :

இப்படி ஒரு நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கும் வனிதா ‘இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்… ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யும், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்கள் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும் ? மிகவும் புத்திசாலித்தனமான அரசியல் நாடகம், பொதுமக்களின் அன்பு மற்றும் பாசத்துடன் விளையாடுவதற்கு மைண்ட் கேமைப் பயன்படுத்துகிறார்’

விக்ரமன் வெற்றி பெற்றால் :

அரசியல் நோக்கங்களுக்காக. கமல்ஹாசன் தனது கட்சிக்கோ வேட்பாளருக்கோ வாக்களிக்கவோ அல்லது தனது கட்சிப் போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ கேட்பதில்லை.. விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் ஆதரவு மற்றும் சமூக ஆதரவால் மட்டுமே, பார்வையாளர்கள் அல்லாத வாக்குகள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் அரசியல் காட்சிகள் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக வனிதா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

வனிதாவுக்கு வந்த மிரட்டல் :

அதில் ‘சம்மந்தபட்ட யூடுயூப் சேனலுக்கு போன் செய்து என்னை மிரட்ட முயற்சிக்கிறார்கள். யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்ல. உங்க அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமா பாத்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க.ஒரு பிக் பாஸ்ல ஜெய்கருதுக்கு இவ்வளவு அராஜகம்னா தேர்தல் வரும்போது என்னெல்லாம் செய்வாங்க இந்த மாதிரி அரசியல் கட்சிகள். உங்களை நான் தொல்லை செய்யாத அரசியலில் உங்கள் அரசியலை பண்ணுங்க. எங்கள் பொழுதுபோக்கு துறையை தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

Advertisement