அன்று ஆம்பளையா என்று கேட்டுவிட்டு இன்று அருண் விஜய் படம் குறித்து வனிதா போட்டுள்ள பதிவை பாருங்க.

0
638
vanitha
- Advertisement -

தனது அண்ணன் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் யானை படத்திற்கு தனது வாழ்த்துக்களை சொல்லியுள்ளார் வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள வனிதா பேசுகையில் நான் செய்த தவறை எண்ணி எனது குடும்பத்தார் அனைவருக்கும் ஒரேவிதமான கடிதம் எழுதி அதனை ஈமெயில் செய்தேன்.

-விளம்பரம்-

ஆனால், அதற்காக எனக்கு எந்த பதிலும் யாரிடமும் இருந்தும் வரவில்லை. என் அம்மா இருந்த வரை நான் என் குடும்பத்தாருடன் தொடர்பில் தான் இருந்தேன். ஆனால் என் அம்மா இறந்த பிறகு என் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் கூட என்னை கண்டுகொள்வது இல்லை.நான் என் தவறை எண்ணி மன்னிப்பு கேட்டும் அவர்கள் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என் அப்பா விஜயகுமாரும் சரி என் சகோதரரான அருண் விஜய்யும் சரி ஹீரோவாக இருந்து என்ன பிரயோஜனம்.

- Advertisement -

இதையும் பாருங்க : என்னது ஸ்ருதி ஹாசனுக்கு இப்படி ஒரு ஹார்மோன் பிரச்சனையா – அதனால் தான் திருமணமே வேண்டாம் என்று சொன்னாரா ?

திட்டி தீர்த்த வனிதா :

எத்தனையோ பேர் என்னை உங்கள் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள கூறுகிறார்கள். இதனால் அவர்கள் உங்களை எப்படி கழுவி ஊற்றுகிறார்கள் என்பதும் நான் கண்டிருக்கிறேன். இப்போதும் நான் ஒரு தனியாக தைரியமான பெண்ணாக தான் இருந்து வருகிறேன். மேலும், நான் இப்போதும் வனிதா விஜயகுமார் தான் என் மகளும் விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதை பெருமையாக சொல்வேன் என்று அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

வனிதாவும் சர்ச்சைகளும் :

வனிதாவிற்கும் சர்ச்சைகளுக்கும் என்றும் பஞ்சம் இருந்தது இல்லை. விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ரார். சமீபத்தில் கூட வனிதா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அங்கு தனுக்கு மரியாதை இல்லை என்றும் அங்கு நடக்கும் விஷயங்களில் தனக்கு உடன்பாடு இல்லை, அங்கு இருந்து தனது பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் வெளியேறி இருந்தார்.

குடும்பத்துடன் சேர துடிக்கும் வனிதா :

தற்போது வனிதா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரசாந்த் நடித்து வரும் ‘அந்தாதுன்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனுடன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார் வனிதா அப்போது, தியாகராஜன், வனிதாவின் தந்தை குறித்து கேட்டு இருந்தார். அப்போது பேசிய வனிதா, தான் தனது அப்பாவுடன் இணைய நிறைய முயற்சிகள் எடுத்ததாகவும் ஆனால் சிலர் என்னை என் அப்பாவுடன் இணைய தடுக்கின்றனர் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

அருண் விஜய் படத்தை வாழ்த்திய வனிதா :

இந்நிலையில் தனது அண்ணன் அருண் விஜய்யின் யானை படத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வனிதாவின் தங்கை ப்ரீத்தாவின் கணவர் ஹரி இயக்கியிருக்கிறார். அந்த வாழ்த்தில், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். வனிதா ஆண்டு தோறும் அருணவிஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு தான் வருகிறார். ஆனால், அதை எதையும் அருண்விஜய் கண்டு கொண்டது இல்லை. இருந்தாலும் அருண் விஜய்க்கு தொடர்ந்து தூது அனுப்பி கொண்டு தான் இருக்கிறார் வனிதா.

Advertisement