என்னது ஸ்ருதி ஹாசனுக்கு இப்படி ஒரு ஹார்மோன் பிரச்சனையா – அதனால் தான் திருமணமே வேண்டாம் என்று சொன்னாரா ?

0
724
- Advertisement -

நடிகர் சுருதிஹாசன் உடலில் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவின் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சுருதிஹாசன். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார். அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருந்தார் .

-விளம்பரம்-
sruthi hassan

மேலும், இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அன்று அமீரால் தன் உன் பெயர் கெடுகிறது என்று சொன்ன அக்கா இன்று அமீர் பற்றி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

ஸ்ருதி ஹாசன் காதல்:

பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். தற்போது ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தான் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் ஆன்லைனில் வெளிவந்து இருந்தது. இதில் மிதுன் சக்ரவர்த்தி, அர்ஜன் பாஜ்வா மற்றும் கவுகர் கான் உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
sruthi

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படங்கள்:

நடிகர்கள் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் தயாராகி வரும் சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தான் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது, ஒரு சில நாட்களாகவே ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்து இருந்தார்.

ஸ்ருதி ஹாசனுக்கு இருக்கும் பிரச்சனை:

அவருக்கு பி.சி.ஓ.எஸ். என்ற மருத்துவ ரீதியிலான பாதிப்பு இருக்கிறது. இந்த பாதிப்பு பொதுவாக சீரற்ற மாதவிடாய், முகம், உடல் பகுதிகளில் முடி அதிகம் வளர்தல் மற்றும் எடை கூடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோக வேறு சில தீராத உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த கூடிய ஆபத்தும் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் இவர் என்டோமெட்ரியாசிஸ் என்ற பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக கூறி இருந்தார். இது அதிக வலி ஏற்படுத்த கூடியது. கர்ப்ப குழாய் பகுதியின் வெளியே திசுக்கள் வளரும் ஆபத்தும் காணப்படும். இந்நிலையில் இதுபற்றி ஸ்ருதி ஹாசன் கூறியது, ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் கடினம் நிறைந்த பகுதியாக இது இருக்கும்.

ஹார்மோன் பாதிப்பு குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியது:

இதனால் சமச்சீரற்ற நிலை, வயிறு நிரம்பியது போன்ற உணர்வு மற்றும் வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுடன் போராட வேண்டிய சிக்கலான நிலை. ஆனால், இதனை எதிர்த்து போராட வேண்டிய ஒன்றாக எண்ணாமல் இயற்கையான நிகழ்வு என அதனை ஏற்று கொள்ள தயாராகி இருக்கிறேன். இதை எனது உடல் ஏற்று அதற்கேற்ப சிறந்த முறையில் செயல்படும். சரியான உணவு, நன்றாக தூங்குதல் மற்றும் எனது வேலையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வது ஆகியவற்றுக்காக நான் நன்றி கூறி கொள்கிறேன். எனது உடல் தற்போது சரியாக இல்லை. ஆனால், இதயம் சீராக இயங்குகிறது. நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். அதனால் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் பாய்கின்றன என்று கூறி இருக்கிறார்.

Advertisement