தந்தையின் கிஸ்ஸிங் வீடியோ. தற்கொலை எண்ணத்திற்கு சென்றுள்ள பீட்டர் பாலின் மகன்.

0
5131
peter-paul
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சைதான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. வனிதா மற்றும் பீட்டர் பவுலின் விஷயத்தில் பீட்டர் பவுலின் மனைவியைவிட அதிக பேட்டி கொடுத்தது தயாரிப்பாளர் ரவீந்திரன் தான். தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதாவின் திருமண விஷயம் குறித்து பேட்டியளித்த வந்ததால் கடுப்பான வனிதா நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவில் வந்த ரவீந்திரன் இனி அவரைப் பற்றி எந்த ஒரு ஊடகத்திலும் பேட்டி அளிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
vanitha

மேலும் பீட்டர் அவனின் மகன் குறித்து பேசிய ரவீந்திரன், பீட்டரின் மகன் தினமும் எனக்கு போன் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன நடந்தது தெரியுமா ? பீட்டர் பவுல் வனிதாவுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான போது அந்த பையன் எனக்கு கால் செய்து அழுதான். அதுமட்டுமல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் அவனிடம் ஒருவர் இன்னிக்கும் உங்க அப்பா கிசிங் வீடியோவை போடுவாரா என்று கேட்டதாக கூறினான். அதைக் கேட்டு அழுத அந்தப் பையன் தனக்கு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பது போல தோன்றுகிறது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று புரியவில்லை என்று கூறியதாக ரவீந்திரன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டர் பவுலின் மகன், தனது தந்தை மறுவாழ்வு மையத்தில் இருந்தது உண்மை தான் என்று கூறிஇருந்தார். மேலும், என் தந்தை டி- டொடலர் கிடையாது. மேலும், என்னிடமே குடித்துவிட்டு வந்து உன் அம்மாவை போலவே வேறு ஒரு ஆன்டி வந்தால் உனக்கு ஓகேவா என்று கேட்டார் என்றும் கூறியுள்ளார். அவரின் திருமண செய்தி எல்லாம் கேட்டு எனக்கு சலித்து போச்சி. அவருக்கு அவ்வளவு பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், வனிதா வீட்டிற்கு சென்றது குறித்து பேசிய பீட்டரின் மகன், வீட்டுக்கு சென்றது உண்மை தான். ஆனால், திருமணம் பத்திரிகை வெளியான போது என் அப்பா அது எல்லாம் பொய் என்று சொன்னர். பின்னர் அது வைரலாகி விட்டது, எனவே நான் உண்மையாக திருணம் செய்துகொள்ள போகிறேன் என்று சொல்லி அவர் தான் என்ன செட்டில்மென்ட் வேண்டும் என்று சொன்னார் என்றும் கூறியிருந்தார் பீட்டர் மகன்.

-விளம்பரம்-
Advertisement