பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார் அதற்கு வாழ்த்து தெரிவித்த வனிதா கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நீங்களும், நானும் ஒன்றாகத் தான் நமது வாழ்க்கையைத் தொடங்கினோம். நமது குடும்பத்தை நாம் பெருமையடைச் செய்ய வேண்டும்.
நமக்குள் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ஐ லவ் யூ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இதற்கு அருண் விஜய் ஒரு ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை. வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் பாருங்க : வடிவேலுவால் 18 நாள் சும்மா இருந்தேன், 60,000 வீனா போச்சி, என் காட்சிய கூட நீக்க சொன்னாரு – வெற்றிகொடிகட்டு பெஞ்சமின்.
பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.
இந்த நிலையில் வனிதாவின் சொந்த சகோதரியான ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ஸ்ரீதேவி,வனிதாவிற்கு முன்னதாகவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேலும், காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது இவருக்கு 4 வயதில் ‘ரூபிகா’ என்ற மகளும் இருக்கிறார்