படத்தின் போது ரூமிற்கு அழைத்த நடிகர் – விசித்ரா சொன்னது இந்த மாஸ் நடிகரை தானா? ஆதாரங்களை பகிரும் நெட்டிசன்கள்.

0
566
- Advertisement -

பிக் பாஸ்ஸில் கொடுத்த பூகம்பம் டாஸ்க்கில் விசித்ரா கூறியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 52 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் விசித்திரா, என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என்றால் 2001 ஆம் ஆண்டு நடந்தது தான். தெலுங்கில் பிரபலமான முன்னாடி நடிகர். அவருடைய ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அந்தப் படத்தின் சூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தேன். அங்குதான் நான் என்னுடைய வருங்கால கணவரை சந்தித்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக இருந்தார். இது குறித்து நான் பல பேட்டிகளில் சொல்லியிருந்தேன். அந்தப் படத்தின் ஹீரோ என்னை முதன்முதலாக பார்த்தார். நான் என்னை அவரிடம் அறிமுகம் செய்யப் போனேன். ஆனால், அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? நைட்டு ரூமுக்கு வந்திடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னது எனக்கு பெரிய ஷாக் ஆக இருந்தது. பின் நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கி விட்டேன்.

இரவில் சில நபர்கள் என்னுடைய அறையை தட்டிக் கொண்டு ரகளை செய்திருந்தார்கள். இதனால் நான் மிகவும் பயந்தேன். எப்படியாவது ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லனும் என்று நினைத்தேன். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை சகித்துக் கொண்டிருந்தேன். இதை கவனித்த என்னுடைய கணவர், என்னிடம் என்ன பிரச்சனை? ஏதாவது என்னால் உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார்.

-விளம்பரம்-

அப்போது நான், இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அறை வேண்டும். ஆனால், நான் இங்கு தான் தங்கி இருக்கிறேன் என்று யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவர் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. என்னுடைய ரூமுக்கு எதிரில் தான் நான் தங்கி இருந்தேன். ஆனால், நான் அங்கு இல்லை. நான் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு கதவை தட்டிக் கொண்டு இருந்தார்கள்.

மேலும், நான் அவர்கள் எண்ணத்திற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை என்று என்னை எப்படியாவது படப்பிடிப்பிலிருந்து தூக்க வேண்டும் என்றும் மொத்த படக்குழுவே பிளான் செய்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் சண்டை காட்சி நடந்து கொண்டிருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர், மக்கள் எல்லோரும் ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தவறான இடத்தில் கை வைத்தார். நான் எதைச்சையாக நடந்தது என்று அமைதியாகி விட்டேன்.

அடுத்த டேக்கிலும் இதே மாதிரி நடந்தது. அவர் யார் என்று கையும் களவுமாக கண்டுபிடித்து அவரை ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஒப்படைத்தேன். ஆனால், அவரை கண்டிக்காமல் என்னை பளார் என்று அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் வரவில்லை.நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார்.

இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை என்பதால் சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தேன். அந்த ரணத்திலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சினிமாவில் நடிக்காததற்கு காரணமும் இதுதான். இப்படி விசித்ரா பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விசித்ராக்கு நடந்த சம்பவம் 2001 ஆம் ஆண்டு வந்த பலேவடிவி பாசு தெலுங்கு படத்தின் பெயர். இந்த படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணா தான் நடித்திருக்கிறார். தற்போது இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement