பைனல் நெருங்கும் வேளையில் எதிர்பாரதா திருப்பம் – விஜயும் இல்லை, மணியும் இல்லை – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா

0
418
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார். இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது. இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஒருவழியாக பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய், மாயா, மணி ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றார்கள். இதில் யார் வெளியேறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

நாமினேஷன் குறித்த தகவல்:

அந்த வகையில் இதுவரை வெளியாகியிருக்கும் வாக்குகளின் பட்டியலில் பூர்ணிமா ரவி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால், அவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இவரை அடுத்து குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் மாயா மற்றும் விஜய் வர்மா. இந்த நிகழ்ச்சியை விட்டு மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் கூறுவதற்கு ஏற்ப விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

விசித்திரா குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து விசித்ரா நன்றாக விளையாடிக் கொண்டுதான் வருகிறார். இவர் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் தன்னுடைய தரப்பு நியாயத்தை வைத்து இருக்கிறார். ஒரு சீனியர் நடிகை பிக் பாஸ் வீட்டில் இவ்வளவு நாட்கள் இருந்தது இல்லை. மேலும், அர்ச்சனாவிற்கு விசித்திரா ஆதரவு கொடுத்திருந்த போது கமலே பாராட்டியிருந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக விசித்ராவின் செயல்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

விசித்திரா செய்த வேலை:

இவர் மற்ற போட்டியாளர்களை விமர்சித்தும் கிண்டல் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் மோசமாக பேசி வருகிறார்.அதிலும் தினேஷ்- விசித்ராவுக்கு ஆரம்பத்தில் இருந்து ஏழாம் பொருத்தமாக தான் இருக்கிறது. அவர் என்ன செய்தாலுமே விசித்ரா அதை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் கடந்த வாரம் விசித்ரா, தினேஷனுடைய மனைவி ரக்ஷிதாவை குறித்தும், தினேஷ் குடும்ப வாழ்க்கை குறித்தெல்லாம் விமர்சித்து பேசிந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக கிளம்பி இருந்தது.

விசித்திரா வெளியேற்றம்:

ஏற்கனவே மாயா- பூர்ணிமா இருவரும் தினேஷ் டார்கெட் செய்ய ரக்ஷிதாவை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள். பின் இவர்களுடன் சேர்ந்து கொண்டு விசித்ரா தினேஷை பேசியது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருந்தது. இதற்கு கமலுமே கடந்த வாரம் கண்டித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் விசித்ரா வெளியேறிப்பது பலருக்கும் அதிர்ச்சி தான். ஒருவேளை பிக் பாஸ் மாயாவை காப்பாற்ற தான் இப்படியெல்லாம் செய்திருக்கிறதா? என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement