பெற்ற மகன் கொடுத்த முத்தத்தை கூட கொச்சை படுத்திய நபர் – கடுப்பான விஜயலக்ஷ்மி.

0
4729
vijayalakshmi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார். இவரது ஒரு தங்கையான நிரஞ்சனா, துல்கர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தார்.

இதையும் பாருங்க : தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யாவின் கணவர் சத்யா.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த போது இயக்குனர் மேல் காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதே போல விஜியின் அக்காவான கனி, சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் பரிசையும் வென்றார். சமீபத்தில் விஜயலட்சுமி தனது மகனுக்கு முத்தமிட்டபடி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் மோசமாக கமன்ட் செய்து இருந்தார்.

தனது சொந்த மகனை முத்தமிட்டதை கூட கொச்சையாக பேசியதால் கடுப்பான கடுப்பான ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் என்று கடுப்பாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement