தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யாவின் கணவர் சத்யா.

0
3499
ramya
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-
Bigg Boss Ramya NSK announces birth of baby - Tamil News - IndiaGlitz.com

அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.பாடகி ரம்யா, கடந்த ஆண்டு விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டு இருந்தனர்.

இதையும் பாருங்க : சனம் ஷெட்டிக்கு ஆபாச தொல்லை அளித்த இளைஞர் கைது – இவர் தான் அது (ஆள பாத்தாலே அக்குயூஸ்ட் மாதிரி தான் இருக்கான்

- Advertisement -

ரம்யா திருமணம் செய்துகொண்ட நடிகர் சத்யா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் ஜெய்சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டு தான் ரம்யாவிற்கு குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த கையேடு சத்யா மற்றும் ரம்யா தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் பைனலுக்கு வரவில்லை. அதற்கு காரணம் சொன்ன ரம்யா, எனக்கு லேசான வைரல் காய்ச்சல் இருந்தது அதனால்தான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லைஎன்று கூறியிருந்தார். ரம்யா குழந்தைக்கு விரைவில் ஒரு வயது நிறைவடைய இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ரம்யாவின் கணவர் சத்யா தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement