தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக விஜயலட்சுமி திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். விஜயலட்சுமி அவர்கள் 2007ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னட மொழியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் மாறிவிட்டார். இவர் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
அதற்குப்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நீதிபதியாக பங்கேற்றிருந்தார். பெரும்பாலும் படங்களில் இவர் குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் விஜயலக்ஷ்மி அவர்கள் மிக கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதுவரை திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இவருடைய கவர்ச்சி படங்கள் வராத நிலையில் தற்போது முதன்முறையாக இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி இருப்பது அனைவருக்கும் ஆச்சரித்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதை பார்த்து குடும்ப குத்துவிளக்கா இது! என்று கமெண்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் இதை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். தற்போது விஜயலக்ஷ்மி அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய் கொண்டு இருக்கும் சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.