பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வார எலிமினேஷன் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் கோல்டன் டிக்கெட் வென்ற ஜனனியை தவிற மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டுள்ளனர் இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பிவரும் நிலையில் ஐஸ்வர்யா இந்த வாரமும் காப்பாற்றபோட்டுவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் அரசால் புரசலாக சில தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா கடந்த இரண்டு வாரங்களாக நாமினேஷனில் இடம்பெற்று வந்தாலும் அவர் இரண்டு வாரமும் காப்பாற்றபட்டுவிட்டார். ஆனால், அடுத்த வாரம் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த வாரமாவது ஐஸ்வர்யா வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த வாரம் விஜயலக்ஷ்மி மற்றும் பாலாஜி வெளியேற்றபட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, ஐஸ்வர்யா அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பைனலுக்கு தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கபடுகிது, அதுமட்டுமில்லாமல் ஆரம்பம் முதலே ஐஸ்வர்யாவிர்க்கு சாதகமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வருவதால் ஐஸ்வர்யா டைட்டில் வின்னராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சில பேச்சுகளும் அடிபடுகிறது.
அதே போல இந்த வார எலிமினேஷனில் யாஷிகாவின் பெயர் இடம்பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மஹத் விசயத்தை தவிர யாஷிகா டாஸ்கிலும், தனிப்பட்ட முறையில் கடுமையான போட்டியாளராகவே இருந்து வருகிறார். எது எப்படியோ இந்த வாரம் வெளியேற போகும் இரண்டு நபர்களின் பெயர்கள் உறுதியானதும் நாளை நமது வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.