பிக் பாஸ்’ வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளராக இருந்த சென்ராயன் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவரிடமும் சகஜமாகப் பழகிக்கொண்டு வந்த சென்ராயன் பின்னர் ஒவ்வொருவரின் சுயத்தையும் தெரிந்துகொண்டு உஷாராக நடந்து வந்தார்.
சென்ராயன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை பாலாஜியிடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அதே போல பாலாஜியின் மனைவி நித்யா இருந்தவரை எப்போதும் நித்யாவிற்கு ஆதரவாகவே இருந்தார் சென்ராயன். பாலாஜி எப்படியாவது நித்யாவிடம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சென்ராயன் எப்போதும் கூறிவந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்கு பிரீஸ் டாஸ்க்கின் போது நித்யா வந்த போது கூட பாலாஜி முழுமையாக மாறிவிட்டார் என்று பாலாஜிக்கு, நித்யாவிடம் சர்டிபிகேட் அளித்தார் சென்ராயன். அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது, தான் வெளியே சென்றதும் கண்டிப்பாக நித்யாவை சந்திக்கிறேன் என்று பாலஜியிடம் கூறியிருந்தார் சென்ராயன.
இந்நிலையில் நித்யாவையும் அவரது மகள் பொசிகாவையும் சமீபத்தில் நேரில் சென்று சந்தித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் சென்றியான். சமீபத்தில் அந்த புகைப்படங்களை பாலாஜியின் மனைவி நித்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.