திருமாவை தொடர்ந்து விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த விசிக MLA – ஆமா, இவரு அசீம் மாமானு சொன்னாங்களே.

0
448
azeem
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

பணப்பெட்டி டாஸ்க் :

மேலும், கடந்த செவ்வாய் கிழமை நடத்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

விசிக பிரபலம் விக்ரமன் :

ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன். தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.

மக்கள் மனதில் இடம்பிடித்த விக்ரமன் :

ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல செய்து நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.

-விளம்பரம்-

இறுதி வாரத்தில் விக்ரமனுக்கு நேரடி ஆதரவு :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் விக்ரமனுக்கு முதன் முறையாக நேரடியாக தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் திருமாவளவன் ‘Bigboss-இல் நடைபெறும் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். Hostar வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம்.- தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆளூர் ஷானவாஸ் :

திருமவளவனின் இந்த பதிவை தொடர்ந்து ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி அரசியல் தளமாக மாறிவிட்டது என்று பலரும் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். திருமாவளவனை தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தை கட்சியில் MLAவான ஆளூர் ஷானவாஸ், விக்ரமனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம்; கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்!” என்ற தலைவர் திருமாவளவன் வரிகளுக்கு ஏற்ப, கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

அசீம் மாமா இவர் இல்லையா :

ஏற்கனவே ஒரு எபிசோடில் விக்ரமன் குறித்து பேசிய அசீம் ‘என்னுடைய அப்பா உடன் பிறந்த தம்பி. அதாவது, என் சித்தப்பா உடைய கட்சியில் அவன் உறுப்பினராக இருக்கிறான். அதனால் தான் அவன் என்னிடம் சரியாக பேசுவதில்லை’ என்று கூறி இருந்தார். அப்போது நெட்டிசன்கள் பலரும் அசீம் மாமா, ஆளூர் ஷானவாஸ் என்று கூறி வந்தனர். இப்படி இருக்கையில் ஆளூர் ஷானவாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கும் விஷயம் அசீம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement