விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 69 நாட்களை கடந்து விட்டது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறார். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளர்களாக அஸீம் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் பாருங்க : fashion Show -வில் கேட் வாக் – சிறுத்தை படத்தில் வந்த குட்டி பொண்ணா இது. வைரல் வீடியோ.
இதற்காக அவர் நட்சத்திர ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட்டும் இருந்தார். ஆனால், சமீபத்தில் அவரது தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறினார். இருப்பினும் அஸீம் பிக் பாஸில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தார் அஸீம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அஸீம், ஒருசிலர் அழுத்தம் மற்றும் பிரச்சனை காரணமாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை இவ்வளவுதான் என்னால் தற்போதைக்கு சொல்ல முடியும் உங்களை ஏமாற்றி இதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களின் அன்பும் ஆதரவுக்கும் நன்றி விரைவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
அப்படி என்ன அழுத்தம் அவருக்கு என்று அவரது நண்பர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கூறியுள்ள அவர்கள், அஸீம் – ஷிவானி ஜோடி உள்ளே போனா கன்டென்ட் கிடைக்கும்னு விஜய் டிவி நினைச்சது நிஜம். தற்போது பாலா-ஷிவானி ஜோடிக்கிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் மாதிரியான ஒரு தோற்றம் உருவாகி வலுப்பெற அதுவே கன்டென்ட் ஆகிடுச்சு.இந்தச் சூழல்ல அக்ரிமென்ட் போட்டபடி அஸீம் உள்ளே போனா ஷிவானி அஸீம்கிட்டப் பேசுவாரா என்பது சந்தேகம். மக்கள் மத்தியில ஷிவானி பேர் டேமேஜ் ஆகி ஷோவுல இருந்து வெளியேற வேண்டிய நிலை வந்துட்டா என்ன செய்யறதுன்னு நினைச்சே சேனல் அஸீம் என்ட்ரியைத் தாமதப்படுத்தியிருக்கு.
அதே சமயம் அஸீம் உள்ளே போறதை விரும்பாத ஷிவானி அம்மாவுமே சில காய் நகர்த்தலைச் செய்ததாகவும் சொல்கிறார்கள்.இந்த விஷயம் எல்லாம் அஸீம் காதுக்கு போக, போங்கடா நீங்களும் உங்க ஷோவும்’னு கிளம்பி வந்துட்டார்” என்று கூறி உள்ளார்கள். இதற்கு ஏற்றார் போல அஸீம் தனது இன்ஸ்டகிராமில் சமீபத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார்.,அதில் நான் விலகி நிற்பது என் நலத்திற்கல்ல உன் நலத்திற்காக தான். என்னுடன் மோதும் முன் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள். ஏனென்றால் நான் அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே என் முன்னால் நிற்க உனக்கு தைரியம் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்;