பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் பாஸ் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது.
நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு குழுக்களாக பிரிந்து டாஸ்க் ஒன்றை செய்த்தனர். இதில் வெற்றி பெரும் ஒரு நபர், அவரும் அவரது பார்ட்னரும் அடுத்த வாரம் நடைபெறும் ஏவிக்ஷன் பிராசஸ்சில் பங்கேற்க மாட்டார்கள் என்று சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் ஜோடியாக இருந்த வேல் முருகன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் வெற்றி பெற்றனர். இதனால் இவர்கள் இருவரையும் அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது.
இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளராக என்டர் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஏவிக்ஷனில் இடம்பெற்றுள்ள சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அஜீத்திற்கு eviction free pass கிடைத்துள்ளது. இதுவரை பல்வேறு வலைதளத்தில் நடத்தப்பட்டுள்ள ஓட்டிங்கில் ரேகா மற்றும் சனம் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.