பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்யப்போகும் சக போட்டியாளர். யாருனு பாருங்க.

0
125213
chandan-shetty
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் நிகழ்ச்சி என்று பார்த்தால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் கூட கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, காதல்,சர்ச்சைகள் என பிக் பாஸ் செட்டே பட்டைய கிளப்பும் அளவிற்கு இருக்கும். அதிலும் அவர்களுக்கிடையே காதல் மலர்வது வழக்கமான ஒன்று தான். மேலும், தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் முதல் சீசனில் இருந்தே இந்த காதல் அலைகள் கரைபுரண்டு ஓடியது என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for Bigg Boss 5 KaNNADA wiNNER

மேலும், முதல் சீசனில் நடிகர் ஆரவ்- ஓவியா, இரண்டாவது சீசனில் நடிகர் மகத்- யாஷிகா,மூன்றாவது சீஸனில் கவின்- லாஸ்லியா. இதில் கவின், லாஸ்லியா காதல் இன்னும் வரை வேற லெவல்ல இருக்கு. தற்போது கூட இவர்கள் காதல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் தான் உள்ளது. ஆனால், இப்படி போட்டியாளர்கள் இடையே ஏற்படும் காதல் கடைசியில் திருமணத்தில் போய் முடியுமா? என்றால் அது கேள்வி குறியாகத் தான் உள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருக்கும் நாட்களில் மட்டும் தான் காதலிப்பார்கள் தவிர வெளியே வந்து யாரும் அந்த காதல் குறித்து பேசியதில்லை. உதாரணத்துக்கு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல் காவியமாக இருந்தது.

இதையும் பாருங்க : அஜித் தவறவிட்ட இந்த படங்களை எல்லாம் தெரியுமா.. போஸ்டர்கள் இதோ..

- Advertisement -

ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இருவரும் அதுகுறித்து எந்த ஒரு மூச்சு விடாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இசை அமைப்பாளர் சந்தன் ஷெட்டிக்கும் அந்த சீசனில் போட்டியாளராக பங்குபெற்ற நிவேதா கவுடாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மேலும்,அவர்கள் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட காதல் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தொடர்ந்தது. பின்பு இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற அறிவிப்பையும் அறிவித்திருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்புறவாக தான் பழகினார்கள்.

Bigg Boss Kannada 5 winner Chandan Shetty gets engaged to Niveditha Gowda in a grand ceremony

பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இவர்களுடைய நட்பு காதலாக மாறியது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் இவர்கள் இருவீட்டாரும் மைசூரில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். மேலும், தனியார் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மேலும், இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்ததை தொடர்ந்து கூடிய விரைவில் எங்களுடைய திருமண தேதியை அறிவிப்போம் என்றும் தெரிவித்திருந்தார்கள். அதோடு இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Image
Image

மேலும், ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய காதல் நிகழ்ச்சி முடிந்து இருவரும் கல்யாணம் செய்வது இதுவே முதல் முறை என்று கூட சொல்லாம். இந்த நிலையில் தமிழ் பிக் பாஸில் காதல் மன்னனாக வலம் வந்த கவின்,லாஸ்லியாவை திருமணம் செய்வாரா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும். மேலும், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் தான் பல எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும் இருக்கிறார்கள்.

Advertisement