அஜித் தவறவிட்ட இந்த படங்களை எல்லாம் தெரியுமா.. போஸ்டர்கள் இதோ..

0
5871
- Advertisement -

“நமக்கு என ஆண்டவன் எழுதிவிட்டால் அது நமக்கு கிடைத்தே தீரும், அப்படி கிடைக்காமல் போனால் அது நமக்கு உரியது அன்று”. மேலும், அதை நினைத்து நான் கவலைப்படமாட்டேன் என்று அஜித் தவறவிட்ட படங்களை பற்றி கேட்டபோது பல பேட்டிகளில் கூறியுள்ளார். அப்படி அவர் மிஸ் பண்ண படங்களை பார்க்கலாமா!! அஜித் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு ‘அமராவதி’ படத்தின் மூலம்தான் அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித் நடித்த பாசமலர், பவித்ரா படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் விஜயுடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படமும் வெற்றி இல்லை. இப்படி ஆரம்பத்தில் அஜித் திரைப்பட உலகில் பல தோல்விகளை கண்டு கொண்டிருந்த நிலையில் தான் வசந்த் இயக்கிய,அஜித் நடிப்பில் வந்த “ஆசை” படத்தின் மூலம் பயங்கர வெற்றி கிடைத்தது என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து இயக்குனர் வசந்த் ரெண்டு ஹீரோ வெச்சு படம் எடுக்கலாம் என முடிவு செய்தார்.

-விளம்பரம்-
nerukku ner vijay surya

பின் அதில் ஆசை படத்தின் ஹீரோ அஜித், நம்ம தளபதி விஜய்யும் மீண்டும் இணைக்கலாம் என்று நினைத்தார். இவரும் இணைத்து ‘நேருக்குநேர்’ என்று படத்திற்கு பெயரிட்டு படப்பிடிப்புகள் எல்லாம் தொடங்கின. ஆனால், படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு அஜித்திற்கும், இயக்குனர் வசந்த்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலகினார். மேலும், நேருக்கு நேர் படத்தில் தான் நடிகர் சூர்யா அறிமுகமானார். அது மட்டும் இல்லைங்க அஜித் மிஸ் பண்ண படங்களில் எல்லாம் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்கள் அஜித்துக்கு திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வாங்கித் தந்தது. மேலும், தல அஜித் அஜித்தின் 25வது படம் சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணியில் மீண்டும் இணைய அஜீத்தின் அமர்க்களம், தீனா, சிட்டிசன் அனைத்துமே ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோ படமாக அமைந்தது.

இதையும் பாருங்க : கோலங்கள் சீரியல் நடிகை ஆர்த்தியா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

- Advertisement -

அப்போது அஜித் இரண்டு பட கதைகளில் நடிக்க . இருந்தன ஒன்று “சிங்கம்புலி என்ற ரெட்”,மற்றொன்று ஜெமினி.இந்த இரண்டு படங்களில் ஒன்று நடிக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை அஜித்துக்கு இருந்தது.அப்போது அஜித் ஜெமினி கதையை பார்த்துவிட்டு, ரெட் படத்தில் நடித்தார். இரண்டு படத்தின் கதையும் வழக்கமான ரவுடி ஹீரோ கதை தான். ஆனால், ரெட் படம் வெளிவந்து அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், விக்ரம் நடித்த ஜெமினி படம் மெகா ஹிட் ஆனது. உண்மையிலே ஜெமினி கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தால் வேற லெவல்ல இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறினார்கள். அஜித் ‘நியூ’ படத்தில் நடிப்பதாக இருந்தது.அஜித் எப்பவுமே படம் வெற்றி, தோல்வி எல்லாம் வைத்து நடிக்கமாட்டார். அதையெல்லாம் தாண்டி இயக்குனர்களுடன் ஒரு நட்புணர்வு இருந்தால் மட்டுமே அவர்கள் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவார் என்ற தகவலும் இருந்தது.

gemini vikram
ajith jyothika in new

முதலில் நியூ படத்திற்கு அஜித், ஜோதிகா, பி.சி.ஸ்ரீராம், தேவா என முதலில் அறிவிக்கப்பட்ட டிமே வேறு. சில காரணங்களால் படம் தாமதமாகியது. பின்னர் படம் எடுக்கும் நிலையும் கைவிட்டார்கள். பல நாட்கள் பின்னர் நியூ படத்தில்எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன், ஏ.ஆர். ரகுமான் என படக்குழுவே முழுவதுமாக மாற்றி உள்ளார்கள். பின்னர் இந்த படமும் மக்களிடையே அதிக வரவேற்பும் வெற்றியும் பெற்றது. ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டும் நியூ படத்தில் அஜித் நடிக்காமல் இருப்பதே நல்லது என்று கூறியிருந்தார்கள். இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி, பல சர்ச்சைகள் எழுந்தன. இது அஜித் ரசிகர்கள் விரும்பவில்லை என்ற கருத்தும் இருந்தது. தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஏ ஆர் முருகதாஸ் ஒருவர். இவர் இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் ‘தீனா’.மேலும், அஜித்துக்கு “தல” என்ற பெயரை அளித்த படமும் இதுதான். தல என்ற வார்த்தை காட்டுத்தீயாய் தமிழகம் முழுவதும் பரவியது. மேலும், முருகதாஸ் அவர்கள் அஜித் வைத்து இரண்டாவது படமான மிரட்டல் என்ற படத்தை உருவாக்க தயாரனார்.பின் படத்துக்கான போஸ்டர்கள் எல்லாம் வெளிவந்தன. போஸ்டர்கள் எல்லாம் வேற லெவல்ல, வித்தியாசமாக இருந்தது. அனைவரும் போஸ்டரே மிரட்டலா இருக்குதே என்று கூட கருத்து தெரிவித்தனர்.

-விளம்பரம்-
mirattal movie posters
Image result for அஜித் காங்கேயன்

பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கி சில நாட்களிலேயே கைவிடப்பட்டது. முருகதாஸ் படத்தின் உருவாக்கம் குறித்து அஜித்துக்கு பல கருத்து வேறுபாடுகள் இருந்தது. பின்னர் ‘கஜினி’ என்ற பெயரில் சூர்யா அந்தப் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்தார். மேலும், பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள் படத்தி’ல் நடிப்பதற்காக அஜித் குமார் அவர்கள் நீண்ட தலைமுடி, தாடி என பயங்கர கெட்டப்பில் அஜித் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது. ஆனால், படப்பிடிப்பு குறித்த கருத்துக்கள் தாமதமாகிக் கொண்டே இருந்ததால் அந்த சமயத்தில் அஜீத் ‘பரமசிவன், திருப்பதி’ போன்ற படங்களில் அவர் நடித்து முடிந்தார். பின் நான் கடவுள் படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. பின்னர் பாலா நான் கடவுள் படத்தை ஆர்யாவை வைத்து ஒரு வழியாக எடுத்து முடித்தார். இப்படி சினிமாவுலகில் பல சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் அஜித் அவர்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. மேலும், சுமாரான கதைகள் இருந்தாலும் அஜித் நடிப்பில் படங்கள் வந்தாலே அது பிளாக்பஸ்டர் படமாக மாறிவிடும் என்ற தகவலும் சினிமா வட்டாரத்தில் பரவிக்கொண்டிருந்தது. மேலும், இத்தனை படங்கள் எல்லாம் சேர்ந்து இருந்தால் அஜித் வேற லெவல்ல இருந்துபாரு என்று ரசிகர்கள் கூறி இருந்தார்கள். ஆனால், அஜித் எந்த உயரத்திற்கு போனாலும் எப்போதும் அனைவரிடமும் அன்பாக பழகும் ஒரு உன்னத மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் எப்போதுமே சொல்வது நாம் சாப்பிடும் அரிசியில் கூட நம் பெயர் இருக்கும் என்று கூறுவார்.

Advertisement