நிரூப் முதுகில் குத்தினாரா – லவ் பிரேக்கப் குறித்து சொன்ன யாஷிகா. இதான் பிரச்சனையா ?

0
577
yashika
- Advertisement -

தன்னுடைய லவ் பிரேக்கப் குறித்து யாஷிகா ஆனந்த் மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

-விளம்பரம்-

அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

- Advertisement -

யாஷிகா ஆனந்த்துக்கு ஏற்பட்ட விபத்து:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை. இதனால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி இருந்தார்.

படங்களில் கவனம் செலுத்தும் யாஷிகா ஆனந்த்:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாஷிகா மறுத்துவிட்டாராம். தற்போது விபத்தில் இருந்து தேறி வந்துள்ள யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். இதனிடையே யாஷிகா ஆனந்த் அவர்கள் நிரூப்பை காதலித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும், இவர்கள் இருவரின் லிப்லாக் காட்சிகள் எல்லாம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

யாஷிகா-நிரூப் காதல்:

ஆனால், இவர்கள் இருவருமே பிரேக்கப் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நிரூப் கலந்து கொண்டிருந்தார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு யாஷிகா தான் சிபாரிசு செய்து இருந்ததாக கூறப்பட்டது. இதை நிரூப்பே நிகழ்ச்சியில் ஒத்துக்கொண்டு இருந்தார். சமீபத்தில் நிரூப் தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து இருந்தோம். இருவருக்குமான உறவு குறித்த ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை.

காதல் பிரேக் அப் குறித்து நிரூப்-யாஷிகா சொன்னது:

எப்போதும் போல் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் யாஷிகா ஆனந்த் கூறியிருந்தது, நான் சொன்ன டயலாக்கை அவருடைய சொந்த டயலாக் போல் பேசி இருக்கிறார். பாய் பிரெண்ட், கேர்ள் பிரெண்ட்டாக இருப்பதெல்லாம் லவ் கிடையாது. முதுகில் குத்தினாலும் அவர்கள் நல்லது செய்துவிட்டுப் போக வேண்டும். பிரேக் கப்புக்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால், அதில் மிக முக்கியமானது என் மனம் காயம் பட்டது தான் என்று யாஷிகா ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement