தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார்கள் ஜி வி பிரகாஷ், விஜய் ஆண்டனி என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வரும் நிலையில் தற்போது வில்லனாக தமிழ் சினிமாவில் கலக்க உள்ளார் இந்த இசையமைப்பாளர். தமிழில் கடந்த 2012 வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி என்று பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.
அதே போல இந்த படத்தின் ஒரு கட்சியில் நந்திதாவின் வீட்டிற்கு வரும் இவர் விஜய் சேதுபதியிடம் பன்ச் டைலாக் பேசிவிட்டு செம அடி வாங்குவார். அதிலும், இந்த காட்சியில் இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. இவர் நடிகர் என்பதை தாண்டி இந்த படத்தின் இசையமைப்பாளரும் இவர் தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. இவருடைய பெயர் சித்தார்த் விப்பின்.
முகேஷ் ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். மேலும் அவரே இந்தப் படத்தில் வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்குப் பின்னர் இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, காஷ்மோரா, கதாநாயகன் போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர், தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஜாக்சன் துரை, முத்தின கத்திரிக்காய், ஜூங்கா, கேப்மாரி போன்ற படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் யாஷிகா நடிக்கும் சல்பர் என்ற படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். முதன்முறையாக யாஷிகா ஆனந்த் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முகேஷ் ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.