வயாகரா சாப்பிட்ட ஃபீல் – மேடையில் யாஷிகாவிடம் ஜொள்ளு விட்டு கூல் சுரேஷ் செய்த செயல். வைரலாகும் வீடியோ.

0
719
yashika
- Advertisement -

யாஷிகா ஆனந்தின் கையை தடவிப் கூல் சுரேஷ் செய்த செயல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கூல் சுரேஷ். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கூல் சுரேஷ். அதற்கு பிறகு இவர் ஸ்ரீ, காக்க காக்க, மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது. பின் கிடைக்கும் கதாபாத்திரங்களில் கூல் சுரேஷ் நடித்து வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : வெறும் உடம்பில் கையை மடக்கி போஸ் கொடுத்துள்ள டாப் 10 சுரேஷ் – இந்த வயதிலும் எப்படி Fitஆ இருக்காரு மனுஷன்.

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு கருத்துக்களை போட்டு சர்ச்சையாக்குவதை வழக்கமாக வைத்து உள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதிலும் மாநாடு படத்தின் ரிலீஸின்போது தியேட்டர் முன்பு மீடியாவிடம் கூல் சுரேஷ் பேசிய பேச்சுகள் மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகவே சோசியல் மீடியாவில் பயங்கரமாக வளர்ந்திருந்தது. அதிலும், இவர் நெஞ்சில் மாஸ்க் போட்டு இருந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

இப்படி சமீபகாலமாக இவர் மிகவும் பிரபலமாகி வருகிறார். ஒவ்வொரு படத்தின் போதும் இவர் விமர்சனங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திற்குத் திரையரங்கு வாசலிலேயே பல் துலக்கிக் கொண்டே கமெண்ட் செய்திருந்தார். இப்படி சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கூல் சுரேஷ். இந்த நிலையில் யாஷிகா இடம் கூல் சுரேஷ் நடந்து இருக்கும் செயல் தற்போது பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

தற்போது யாஷிகா ஆனந்த், அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக உள்ள படம் பெஸ்டி. இந்த படத்தை இயக்குநர் ரங்கா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட்டில் படக்குழுவினருடன் கூல் சுரேஷ் பங்கேற்றிருந்தார். அதில் அவர், வெந்து தணிந்தது காடு யாஷிகா ஆனந்திற்கு வணக்கத்தை போடு. இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்தேன். அதுவே வயாகரா சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுத்தது.

இந்த படத்தை முதல் நாளிலேயே பார்க்க விரும்புகிறேன். இந்த படத்திற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று கூறி இருந்தார். பின் இவர் பேட்டியின்போது யாஷிகா ஆனந்த்தின் கைகளை பிடித்து அதை தடவிக் கொடுத்து இருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டது தற்போது சோசியல் மீடியாவில் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement