சிங்க பெண்ணே பாடலை போட்டு Come Back வீடியோவை வெளியிட்ட யாஷிகா – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
522
yashika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

-விளம்பரம்-
yashika

அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
மேலும், யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மேலும், சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

- Advertisement -

யாஷிகா ஆனந்த் ஏற்பட்ட விபத்து:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி அநியாயமாக பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

விபத்துக்கு பிறகு யாஷிகா ஆனந்த் சென்ற முதல் நிகழ்ச்சி:

பின் யாஷிகா ஆனந்த் தன் உடல் நலம் குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் தான் யாஷிகா ஆனந்த் வீடு திரும்பி இருந்தார். உடல் குணம் அடைந்து யாஷிகா ஆனந்த் முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு யாஷிகா ஆனந்த் கையில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்தார்.

-விளம்பரம்-

யாஷிகா ஆனந்த் போட்ட வீடியோ:

அதே போல அடிக்கடி விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்ட யாஷிகா, சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கும் சிறப்பு விருந்தினராக சென்று வந்தார். இந்நிலையில் சிங்கப் பெண் போல யாஷிகா ஆனந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் இன்னொருபக்கம் கழுவி ஊற்றி வருகின்றனர். அதில் நெட்டிசன்கள் கூறியது, அடுத்த டார்கெட், யாரைக் கொல்ல போறீங்க? போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

yashika aannand

கழுவி ஊற்றும் ரசிகர்கள்:

பின் ஒரு உயிரை கொன்று விட்டு கம்பக் ஒரு குறைச்சலா? என்பது போன்ற பதிவையும் போட்டு ரசிகர்கள் யாஷிகா ஆனந்த்தை திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ரசிகர்கள் விமர்சிப்பதற்கு யாஷிகா ஆனந்த்தின் போதைப்பழக்கம் தான் காரணம். யாஷிகா ஆனந்த் அதை விட்டுவிட்டு தற்போது படத்திலும் விளம்பரத்திலும் கவனம் செலுத்தினார். விரைவில் இவர் நடித்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

Advertisement