கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கிரண் தன்னுடைய பெயரில் புதிதாக ஆண்ட்ராய்டு ஆப் துவங்கிய நிலையில் தற்போது யாஷிகாவும் புதிய ஆண்ட்ராய்ட்டு ஆப்பை துவங்கி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு பேரும் புகழையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், அதில் ஒரு சிலர் மட்டும் தான் சினிமாவில் வாய்ப்புகளை அதிகம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர்.
அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
இதையும் பாருங்க : எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – சமந்தாவின் பாராட்டு குறித்து பவித்ரா லட்சுமி விளக்கம்.
பிக் பாஸுக்கு பின்னர் பல்வேரு படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தன்னுடைய பெயரில் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை துவங்கி, அதில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை விற்று வருகிறார். இதற்க்கு 30 நாள் சந்தாவாக 809 கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
நடிகை கிரண் ஏற்கனவே தனக்கென்று ஒரு andriod app ஒன்றை உருவாக்கி அதில் தனது புகைப்படங்களை விற்று வருகிறார். அதில் 5 நிமிடம் கிரணுடன் வீடீயோ காலில் பேச மட்டும் கிட்டத்தட்ட 5000 ரூபாய்யை கட்டணமாக முன் பதிவு செய்ய வேண்டுமாம். ஏற்கனவே ஆபாச நடிகை பூனம் பாண்டே உட்பட பலர் இது போன்ற app-களை உருவாக்கி அதன் மூலம் தங்களது புகைப்படங்களை விற்க ஆரம்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.