இந்நிலையில் நேற்று மஹத் வெளியேறிய போது ரித்விகா, ஜனனி ஆகியோர் மஹத்திடம், வெளிய சென்றதும் பிராச்சியை போய் பார் என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதில் ட்விஸ்ட் என்னவெனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத் அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது யாஷிகா, மஹத்திடம் ''"நீ ரொம்ப நல்லவன்.. ஐ மிஸ் யூ.. பிராச்சியையும் மிஸ் பண்ணதா சொல்லு.. ஐ லவ் யு" என்று தெரிவித்திருந்தார்.
யாஷிகா அப்படி கூறியிருந்ததை பார்க்கும் போது வெளியே சென்றதும் மஹத், பிரச்சியை நேரில் சந்தித்து அவருடன் சேர்ந்து விடுவார் என்று எண்ணியது போல தெரிந்தது. ஆனால், உண்மையில் பிரச்சி, மஹத்துடனான காதலை முறித்துக் கொண்டிருக்கிறார் என்பது யாஷிகா மற்றும் மஹத்திற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் இருந்த போது மஹத்தின் காதலை மஹத்திற்கு சப்போர்ட் செய்யுமாறு அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார் பிராச்சி. ஆனால், மஹத், யாஷிகாவை காதலிப்பது உண்மை தான் என்று கூறியபோது, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக் கொண்டுவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிராச்சி.
மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் இதுவரை அது குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருக்கிறார் பிராச்சி. இதனால் பிராச்சி இன்னமும் மஹத்திடம் கோபமாக தான் உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. ஒருவேளை வெளியே வந்துள்ள மஹத்,பிராச்சியை நேரில் சென்று சந்தித்தால் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் யாஷிகாவின் காதல் கேள்விக்குறிதான்.




