கோர விபத்தால் தோழி இறந்த சம்பவம் – யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம். பின்னணி இதோ.

0
420
yashika
- Advertisement -

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

-விளம்பரம்-

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

- Advertisement -

கார் விபத்தில் இறந்த தோழி :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

வழக்கிற்கு ஆஜராகாத யாஷிகா ;

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் இருந்து மீண்டாலும் தன்னால் தான் தன் தோழி இறந்தார் என்று குற்ற உணர்வில் இருந்து வருகிறார் யாஷிகா. தற்போது உடல் நலம் தேறி வரும் யாஷிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-விளம்பரம்-

பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் :

யாஷிகா மீது பதியப்பட்ட வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் யாஷிகா கடந்த 21 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறியுள்ளது. 25 ஆம் தேதியும் ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement